For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் 2020 துவக்க விழா.. கொரோனா பெருந்தொற்றால் பலியானவர்களுக்கு அஞ்சலி.. உருக்கமான நாடகம்!

டோக்கியோ: ஒலிம்பிக் 2020 துவக்க விழாவில் கொரோனாவால் உலகம் முழுக்க பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஒலிம்பிக் 2020 துவக்க விழா இன்று டோக்கியோ தேசிய மைதானத்தில் நடைபெற்றது. ரசிகர்கள் கூட்டமின்றி, மிகுந்த பாதுகாப்போடு, பெரிய ஆரவாரம் இல்லாமல் இந்த ஒலிம்பிக் துவக்க விழா நடைபெற்றது. 205 நாடுகள் இந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்கிறது.

ஒலிம்பிக் 2020 வில்வித்தை ரேங்கிங் சுற்று.. மோசமாக சொதப்பிய இந்திய வீரர்கள்.. 3 வீரர்களும் சறுக்கல்! ஒலிம்பிக் 2020 வில்வித்தை ரேங்கிங் சுற்று.. மோசமாக சொதப்பிய இந்திய வீரர்கள்.. 3 வீரர்களும் சறுக்கல்!

மொத்தம் 11,326 வீரர்கள் இந்த முறை கலந்து கொள்கிறார்கள். 339 போட்டிகள் மொத்தமாக நடக்கிறது. இதனால் 339 தங்க பதக்கங்கள் இந்த தொடரில் வழங்கப்படும்.

துவக்க விழா

துவக்க விழா

இன்று நடந்த ஒலிம்பிக் 2020 துவக்க விழாவில் கொரோனாவால் உலகம் முழுக்க பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களில் பலியானவர்கள் குறித்து இந்த விழாவில் நினைவு கூறப்பட்டது. கொரியாமா என்ற ஜப்பான் கலைஞர் மூலம் பெருந்தொற்று குறித்த மிகவும் உருக்கமான நாடகம் காட்சிப்படுத்தப்பட்டது.

நாடகம்

நாடகம்

150 வருடங்களில் முதல்முறையாக கடந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் ஒருவருடம் தாமதமாக நடக்கிறது. அதேபோல் துவக்க விழாவில் தொடக்கத்திலேயே கொரோனா காலத்தில் விளையாட்டு வீரர்கள் எப்படி பயிற்சி எடுத்தனர் என்று விளக்கப்பட்டது.

வீரர்கள்

வீரர்கள்

வீட்டிற்கு உள்ளே இவர்கள் எப்படி பயிற்சி எடுத்தனர். கொரோனா காரணமாக ஒலிம்பிக் வீரர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டனர் என்ற நாடகமும் அரங்கேற்றப்பட்டது. இந்த மைதானத்திற்கு ஜப்பான் கொடியை ஜப்பான் விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள், ஒரு சுகாதார பணியாளர் என்று மொத்தம் 6 பேர் கொண்டு வந்தனர். துவக்க விழாவில் ஆரம்பத்தில் UNITED BY EMOTION என்ற ஒலிம்பிக் தீம் பாடம் ஒற்றுமையை குறிக்கும் வகையில் ஒலிபரப்பப்பட்டது.

ஒற்றுமை

ஒற்றுமை

உணர்வுகளால் ஒன்றிணைவோம் என்று குறிப்பிடும் வகையில் இந்த பாடல் அமைந்து இருந்தது. அதேபோல் 1972 முனிச் ஒலிம்பிக் போட்டியில் கொல்லப்பட்ட இஸ்ரேல் வீரர்கள் 11 பேர் குறித்தும் இந்த துவக்க விழாவில் நினைவு கூறப்பட்டு அதற்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.

Story first published: Friday, July 23, 2021, 18:45 [IST]
Other articles published on Jul 23, 2021
English summary
Olympics 2020: Tribute to Covid-19 victims by Japan performer Koriyama in the opening ceremony.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X