முதல் சுற்றிலேயே அவுட்.. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சொதப்பிய அபிஷேக் - யாஷாஸ்வினி.. தோல்வி!

டோக்கியோ: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா - யாஷாஸ்வினி சிங் ஜோடி தோல்வி அடைந்து வெளியேறி உள்ளது.

2020 ஒலிம்பிக் தொடரின் மூன்றாம் நாளான நேற்று இந்தியாவிற்கு முக்கியமான போட்டிகளில் எலாம் தோல்வியை தழுவியது. . துப்பாக்கி சுடுதல், வில் வித்தை என்று எதிலும் இந்தியா பெரிதாக ஆடவில்லை.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பேட்மிண்டன், டென்னிஸ், வாள்வீச்சு போட்டிகளில் இந்திய தரப்பு தோல்வி அடைந்து வெளியேறியது.

ஒலிம்பிக் 2020.. 10 மீட்டர் ஏர் பிஸ்டல்.. இந்தியாவின் மனு பாக்கர் - சௌரப் சௌத்ரி ஜோடி தோல்விஒலிம்பிக் 2020.. 10 மீட்டர் ஏர் பிஸ்டல்.. இந்தியாவின் மனு பாக்கர் - சௌரப் சௌத்ரி ஜோடி தோல்வி

தோல்வி

தோல்வி

இன்றும் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியா தோல்வி முகம் கண்டுள்ளது. இதற்கு முன் தனிப்பட்ட பிரிவிகளில் இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் வீரர் மற்றும் வீராங்கனைகள் தோல்வியை தழுவினார்கள். இந்த நிலையில் துப்பாக்கி சுடுதல் பிரிவின் கலப்பு ஆட்டம் இன்று நடைபெற்றது.

ஏர் பிஸ்டல்

ஏர் பிஸ்டல்

10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா - யாஷாஸ்வினி சிங் ஜோடி இந்தியா சார்பாக கலந்து கொண்டனர். முதல் சுற்றிலேயே 564 புள்ளிகள் மட்டுமே எடுத்து 17வது இடம் பிடித்து தோல்வி அடைந்தனர். இரண்டாவது சுற்றுக்கு இவர்கள் தேர்வாக எட்டு இடங்களுக்குள் வர வேண்டும்.

இரண்டாம் சுற்று

இரண்டாம் சுற்று

முதல் எட்டு இடங்களுக்குள் வரும் அணிகள் மட்டுமே இரண்டாம் சுற்றுக்கு செல்லும் என்பதால், இவர்கள் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறினார்கள். இன்னொரு பக்கம் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் - சௌரப் சௌத்ரி ஜோடி தோல்வி அடைந்து வெளியேறி உள்ளது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

முதல் சுற்றில் இவர்கள் சிறப்பாக ஆடி இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்து மனு பாக்கர் - சௌரப் சௌத்ரி ஜோடி வெளியேறியது. இரண்டு அணிகளும் ஒலிம்பிக் தொடரில் இருந்து வெளியேறி அதிர்ச்சி அளித்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Olympics 2020: Yashaswini Singh Deswal & Abhishek Verma loses in round 1 of 10 M Air Pistol and is knocked out of Olympics.
Story first published: Tuesday, July 27, 2021, 7:46 [IST]
Other articles published on Jul 27, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X