For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீயாய் பரவும் கொரோனா.. ஒலிம்பிக்கில் மேலும் 27 பேர் பாதிப்பு.. மொத்த பாதிப்பு 225 ஆனது!

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் மேலும் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வீரர்கள் பாதிக்கப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் தொடங்கி சரியாக ஒரு வாரம் ஆகிவிட்டது. மிகுந்த பாதுகாப்பிற்கு இடையில் ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படாமல் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது.

Olympics: 27 More New Covid Caes found at Tokyo 2020

பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வந்தாலும் கூட ஒலிம்பிக்கில் புதிதாக இணையும் வெளிநாட்டு வீரர்களால் கேஸ்கள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிலும் கடந்த 5 நாட்களில் தினசரி கேஸ்கள் டோக்கியோ கிராமத்தில் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது புதிதாக டோக்கியோ கிராமத்தில் 3 வீரர், வீராங்கனைகள் உட்பட 27 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க போல் வால்ட் சாம்பியன் சாம் கென்ரிக்ஸ் இதில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிவி சிந்து முதல் பாக்ஸர் சதீஷ் வரை.. ஒரே நாளில் அடுத்தடுத்து 4 வெற்றி.. நம்பிக்கை தரும் இந்திய படை!பிவி சிந்து முதல் பாக்ஸர் சதீஷ் வரை.. ஒரே நாளில் அடுத்தடுத்து 4 வெற்றி.. நம்பிக்கை தரும் இந்திய படை!

இதனால் ஒலிம்பிக்கில் மொத்த கொரோனா பாதிப்பு 225 ஆக உயர்ந்துள்ளது. ஒலிம்பிக்கில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட வீரர்கள் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Story first published: Friday, July 30, 2021, 13:23 [IST]
Other articles published on Jul 30, 2021
English summary
Olympics: 27 More New Covid Caes found at Tokyo 2020, total numbers increased to 225.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X