For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதே நாள்.. 2008இல் வாழ்க்கையில் ஒளியேற்றிய ஒலிம்பிக் பதக்கம் சுஷில் குமார் ஹேப்பி!

டெல்லி: கடந்த 2008ல் இதே நாளில் மல்யுத்த வீரர் சுஷில் குமார், பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் தனது முதல் பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு சாதனை சேர்த்தார்.

Recommended Video

CPL 2020: Match 5 | STZ vs BT | Rain stopped, Zouks beat Barbados

2012 லண்டன் ஒலிம்பிக்கிலும் அவர் வெள்ளிப்பதக்கம் வென்று சுதந்திர இந்தியாவின் இரண்டு தனிநபர் விருதுகளை வென்ற ஒரே வீரர் என்ற பெருமைக்குரியவராகியுள்ளார்.

இந்நிலையில், இதே நாளில் கடந்த 2008ல் தான் வென்ற முதல் பதக்கம் குறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

 தோனிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை.. 2ஆம் கட்டமாக பரிசோதனை நடத்திய சிஎஸ்கே! தோனிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை.. 2ஆம் கட்டமாக பரிசோதனை நடத்திய சிஎஸ்கே!

2008 ஒலிம்பிக்கில் முதல் பதக்கம்

2008 ஒலிம்பிக்கில் முதல் பதக்கம்

ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்கக் கனவு தொடர்ந்த நிலையில் கடந்த 2008ல் மல்யுத்த வீரர் சுஷில் குமார் தன்னுடைய முதல் பதக்கத்தை கடந்த பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் வென்று சாதித்தார். 66 கிலோ எடைப்பிரிவில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கஜகஸ்தானின் லியோனிட் ஸ்பிரிடோனோவை எதிர்த்து வெற்றி பெற்று மல்யுத்தத்தில் வெற்றி கண்ட இரண்டாவது வீரர் என்ற பெருமைக்கு உள்ளானார்.

வெள்ளி வென்ற சுஷில் குமார்

வெள்ளி வென்ற சுஷில் குமார்

கடந்த 2012 லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் வெள்ளி பதக்கத்தை கைக்கொண்டார். இதையடுத்து சுதந்திர இந்தியாவில் தனிநபர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று இரண்டு பதக்கங்களை வென்ற முதல் மற்றும் ஒரே இந்தியர் என்ற பெருமைக்கு உள்ளாகியுள்ளார் சுஷில் குமார். இவரது சாதனை தொடர்கிறது.

காமென்வெல்த் போட்டிகள்

காமென்வெல்த் போட்டிகள்

காமென்வெல்த் போட்டிகளிலும் 3 முறை தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார் சுஷில் குமார். முன்னாள் மல்யுத்த சாம்பியனான சுஷில் குமார் தன்னுடைய அயராத உழைப்பு மற்றும் தன்னம்பிக்கை, மனஉறுதி ஆகியவற்றால் இந்த வெற்றிகளை சாத்தியப்படுத்தியுள்ளார். இந்நிலையில் கடந்த 2008 வெண்கல பதக்கத்தை இதே நாளில் தான் வென்றதாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் நினைவுக் கூர்ந்துள்ளார்.

வாழ்க்கையை மாற்றிய பதக்கம்

வாழ்க்கையை மாற்றிய பதக்கம்

இதே நாளில் கடந்த 2008 ஆகஸ்ட் 20ம் நாளில் ஒலிம்பிக்கில் தான் தன்னுடைய முதல் பதக்கத்தை வென்றதாகவும் தான் பெற்ற இந்த பதக்கம் தன்னுடைய வாழ்க்கையில் ஒளியேற்றி மாற்றியதோடு நிற்காமல் இந்திய குத்துச்சண்டை வரலாற்றையும் மாற்றியதாகவும் அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோவையும் அவர் தனது பதிவில் பகிர்ந்துள்ளார்.

Story first published: Thursday, August 20, 2020, 15:18 [IST]
Other articles published on Aug 20, 2020
English summary
Medal that completely changed the Indian wrestling as well as my life -Sushil Kumar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X