ஒலிம்பிக் வீரர்களின் ஓவர் ஊக்க மருந்து.. அறிக்கையில் அதிர்ச்சி தகவல்.. ரஷ்யாவுக்கு ஒட்டு மொத்த தடை?

பாரிஸ்: கோடை, குளிர்கால மற்றும் பாராஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் ஊக்க மருந்து உட்கொண்டதாக ரிச்சர்ட் மேக் லாரன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய வீரர்கள் அதிக அளவில் இந்த விவகாரத்தில் சிக்கி இருப்பதால் அவர்களை சர்வதேச போட்டிகளில் இருந்து விலக்க வேண்டும் என்று அமெரிக்காவும், ஜெர்மனியும் வலியுறுத்தியுள்ளன.

Over 1000 athletes allegedly involved in doping: Russia faces calls for total ban

கடந்த பல ஆண்டுகளாக விளையாட்டுப் போட்டிகளின்போது வீரர்கள் ஊக்க மருந்து உட்கொண்டு பங்கேற்கும் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக கனடாவைச் சேரந்த வழக்கறிஞர் ரிச்சர்ட் மேக்லாரன் விசாரணை நடத்தி அறிக்கை அளித்துள்ளார்.

அந்த அறிக்கையின் படி இதுவரை ஒலிம்பிக்போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஊக்க மருந்து உட்கொண்ட விவகாரத்தி்ல் சிக்கி இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களில் பெரும்பாலனவர்கள் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவிடாமல் ரஷ்ய வீரர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்காவும், ஜெர்மனியும் கோரிக்கை விடுத்துள்ளன.

ரஷ்யா ஊக்க மருந்து கலாச்சாரத்தை ஆதரித்து வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை ரஷ்ய விளையாட்டு அமைச்சகம் மறுத்துள்ளது. மேலும் ஊக்க மருந்து கலாச்சாரத்தை அரசு ஊக்குவிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

சர்வதேச அனைத்து போட்டிகளில் இருந்தும் ரஷ்ய வீரர்கள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்று ஜெர்மனி தடகள அமைப்பின் கிளமென் பிரோகார்ப் வலியுறுத்தி உள்ளார்.

சமீபத்தில் சர்வதேச தடகள அமைப்பு ரஷ்யா மீதான தடையை புதுப்பித்ததை அடுத்து அந்த நாட்டிற்கு எதிரான தடையை நீட்டித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் உத்தரவிட்டது.

அமெரிக்க ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் தலைவர் ட்ரவிஸ் டைகார்ட், ஊக்க மருந்து கலாச்சாரத்தை வளர்த்து வரும் ரஷ்ய வீரர்களை சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவிடாமல் ஒட்டு மொத்தமாக தடைவிதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊக்க மருந்தே உட்கொள்ள மாட்டோம் என்று நிலைக்கு வரும் வரையில் அமெரிக்க வீரர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஜெர்மனி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு சோச்சி ஒலிம்ப்பிக் போட்டிகளின் போதும் ஊக்க மருந்து சர்ச்சையில் ரஷ்ய வீரர்கள் சிக்கினர். சமீபத்தில் நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்ய தடகள வீரர்கள் பங்கேற்கவில்லை.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

English summary
Paris, Dec 10: The United States and Germany led calls for Russia to be exiled from international competition after the McLaren report said doping in sport in the country represented an "institutional conspiracy".
Story first published: Saturday, December 10, 2016, 11:59 [IST]
Other articles published on Dec 10, 2016
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more