For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாரியப்பனுக்கு நல்ல வேலை வேண்டும்!

By Staff

டெல்லி: பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதைத் தொடர்ந்து, பத்மஸ்ரீ, அர்ஜூனா விருதுகளுடன், பலர் அளித்த ரொக்கப் பரிசுகள் கிடைத்தாலும், நிரந்தர வருமானத்துக்கு ஒரு வேலை கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் உள்ளார் மாரியப்பன் தங்கவேலு.

தற்போது, 22 வயதாகும் மாரியப்பன், கடந்த ஆண்டு ரியோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதல் போட்டியில், 1.89 மீட்டர் (6 அடி 2 அங்குலம்) உயரம் தாண்டி தங்கம் வென்றார்.

அதுவரை ஒரு சிலருக்கே தெரியவந்த மாரியப்பன், நாடு முழுவதும் பிரபலமானார். ஆனால், அதற்கு பின்னா, மிகப் பெரிய சோகமாக, வெற்றி கதை உள்ளது.

கிராமத்து தங்கம்

கிராமத்து தங்கம்

தமிழகத்தின் சேலம் மாவட்டம் பெரியவடுகம்பட்டி என்ற குக்கிராமத்தைத் சேர்ந்தவர் மாரியப்பன். 4 ஆண்கள், 2 பெண்கள் என்ற மிகப் பெரிய குடும்பத்தில் பிறந்தவர் மாரியப்பன். அவருடைய தந்தை, சிறுவயதிலேயே குடும்பத்தை பிரிந்து சென்றுவி்ட்டார்.

கஷ்டப்பட்டு வளர்த்த தாய்

கஷ்டப்பட்டு வளர்த்த தாய்

அவருடைய தாய் சரோஜா, கட்டட வேலை செய்தும், காய்கறிகள் விற்றும் குடும்பத்தை காப்பாற்றி வந்தார். ஐந்து வயதில் நடந்த சாலை விபத்தில், வலது காலின் முட்டிக்கு கீழ் உள்ள பகுதி நசுங்கியது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு, படிப்பையும், விளையாட்டையும் துவக்கினார்.

உயரம் தாண்டுதலில் ஆர்வம்

உயரம் தாண்டுதலில் ஆர்வம்

மற்றவர்களின் ஆதரவு, நம்பி்க்கையின்படி, உயரம் தாண்டுதலில் ஈடுபட்டார். தற்போதைய கோச் சத்யநாராயணா பார்வையில் அவர் பட்டார். அவர் பெங்களூரு அழைத்துச் சென்று இந்திய விளையாட்டு ஆணையத்தில் பயிற்சி அளித்தார்.

வெற்றி - சாதனை - அங்கீகாரம்

வெற்றி - சாதனை - அங்கீகாரம்

பாராலிம்பிக் போட்டிதானே என்று சாதாரணமாக நினைத்து விட வேண்டும். அதற்கு மிக கடினமான பயிற்சிகள் தேவை. ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு, மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது, அர்ஜூனா விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது.

விவசாயி

விவசாயி

தமிழக அரசு வழங்கிய ரூ.2 கோடி உள்பட, பல்வேறு அமைப்புகள், அரசு துறைகள் வழங்கிய பரிசுகளில், சொந்த ஊரில், 5 ஏக்கர் நிலத்தை தன்னுடைய தாயின் பெயரில் வாங்கி, அங்கு விவசாயம் செய்யும்படி கூறியுள்ளார். இதைத் தவிர, வங்கியிலும் பணத்தை டிபாசிட் செய்துள்ளார்.

எதிர்காலக் கவலை

எதிர்காலக் கவலை

தற்போது, பெங்களூரில் பயிற்சி மேற்கொண்டு வரும் மாரியப்பன், அங்கிருந்து நேரடியாக டில்லி வந்து அர்ஜூனா விருது வாங்கும் விழாவில் பங்கேற்றார். மற்றவர்கள் தங்களுடைய குடும்பத்துடன் வந்திருந்தபோது, மாரியப்பன் மட்டும் தனியாக வந்தார்.

அர்ஜூனா விருது வாங்கிய பிறகு, லண்டனைச் சேர்ந்த ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தனது மற்றும் குடும்பத்தின் எதிர்காலம் குறித்த கவலையை அவர் கூறியுள்ளார்.

குடும்பம் நடத்த வேலை தேவை

குடும்பம் நடத்த வேலை தேவை

இப்போது கிடைத்துள்ள பணம் எல்லாம், கொஞ்சம் காலத்துக்குதான். இருந்தாலும் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பேன் என்று மனஉறுதியுடன் கூறுகிறார். ஆனால், குடும்பத்தை நடத்துவதற்கு, ஒரு வேலை கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் அவருக்கு உள்ளது.

எடப்பாடி உதவுவாரா?

எடப்பாடி உதவுவாரா?

தமிழக முதல்வராக இருந்த பன்னீிர் செல்வம், தற்போதைய முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து, ஏதாவது வேலை தரும்படி கேட்டுள்ளார். பாவம் அவர்களே, தங்களுடைய பதவியில் தொடருவோமா என்ற நித்யகண்டம், பூரண ஆயுசு நிலையில் உள்ளனர். அவர்களுக்கு, இதையெல்லாம் கவனிப்பதற்கு நேரம் இருக்குமா தெரியவில்லை.

மனம் தளராமல்

மனம் தளராமல்

நாட்டுக்கு பெருமை சேர்த்த ஒரு வீரர், குடும்பத்தை நடத்துவதற்கு சிரமப்படும் சூழ்நிலை மிகக் கொடுமை. காலில் ஊனமிருந்தாலும், மனம் தளராமல், அடுத்த போட்டிக்கு தயாராகி வருகிறார் `தங்க' மாரியப்பன்.

Story first published: Thursday, August 31, 2017, 12:03 [IST]
Other articles published on Aug 31, 2017
English summary
Paraathelete Mariappan, who won Gold in the Rio paralympic looks for Job
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X