For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காமன்வெல்த் பதக்கம்: அப்படியே பாதிக்குப் பாதி குறைந்து போய் விட்டதே.. ஏன்.. ?

டெல்லி: 2010ம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா பதக்கங்களை அள்ளிக் குவித்திருந்தது. அதாவது 101 பதக்கங்களை வாரியிருந்தது. ஆனால் நடந்து முடிந்த கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இது 64 பதக்கங்களாக சுருங்கிப் போய் விட்டது.

கடந்த முறை 2வது இடத்தைப் பிடித்திருந்த இந்தியா, இந்த முறை 5 வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

கடந்த முறை 38 தங்கங்களை வெட்டி வந்த இந்தியா, இந்த முறை வெறும் 15 தங்கத்தோடு நின்று விட்டது. கடந்த முறை 27 வெள்ளிகளை தேற்றி வந்த இந்தியா, இந்த முறை 30 வெள்ளிகளை இறக்குமதி செய்து ஆறுதல் தேடிக் கொண்டது. அதேசமயம், கடந்த முறை 36 வெண்கலப் பதக்கங்களை அள்ளிய இந்தியா இந்த முறை 19 வெண்கலத்தோடு நின்று விட்டது.

கடந்த முறையை விட இந்த முறை இந்தியாவின் பதக்க வேட்டை பாதியாக குறைந்து போனதற்குக் காரணம், சாய்னா நெஹ்வால் போன்றோர் பங்கேற்காமல் போனதும், இந்திய வீரர், வீராங்கனைகள் முழுத் திறமையுடன் விளையாடாமல் போனதும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

2014 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற 15 பேர் குறித்த ஒரு பார்வை...

முதல் பதக்கம் பளு தூக்குதல் .. கடைசி பேட்மிண்டன்

முதல் பதக்கம் பளு தூக்குதல் .. கடைசி பேட்மிண்டன்

இந்தியாவின் முதல் தங்கப் பதக்கம் பளு தூக்குதல் மூலம் கிடைத்தது. கடைசி தங்கம் பேட்மிண்டன் போட்டியில் வந்தது.

சஞ்சிதா சானு.. காஷ்யப்

சஞ்சிதா சானு.. காஷ்யப்

மகளிர் பளு தூக்குதலில் சஞ்சிதா சானு இந்தியாவின் முதல் தங்கத்தைப் பறித்தார். கடைசி தங்கம் பேட்மிண்டனில் காஷ்யப் மூலம் கிடைத்தது.

முதல் நாளில் 2 தங்கம்

முதல் நாளில் 2 தங்கம்

ஜூலை 24ம் தேதி காமன்வெல்த் போட்டியின் முதல் நாளில், இந்தியாவின் சஞ்சிதா சானு, மகளிர் 48 கிலோ பளு தூக்குதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். அதேபோல ஆடவர் பளு தூக்குதலில் 56 கிலோ பிரிவில் சுகேன் தே தங்கம் வென்றார்.

2வது நாளில் ஒரு தங்கம்

2வது நாளில் ஒரு தங்கம்

2வது நாளில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா, ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் தங்கப் பதக்கம் வென்றார்.

3வது நாளில் 2 தங்கம்

3வது நாளில் 2 தங்கம்

3வது நாளில் இந்தியாவுக்கு 2 தங்கப் பதக்கம் கிடைத்தது. அபூர்வி சன்டேலா மகளிர் துப்பாக்கிச் சுடுதலில் 10 மீ்ட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்றார். அதேபோல 25 மீட்டர் மகளிர் பிஸ்டல் பிரிவில் ரஹி சரோன்பாட் தங்கப் பதக்கம் வென்றார்.

4வது நாளில் சதீஷ் சிவலிங்கத்திற்குத் தங்கம்

4வது நாளில் சதீஷ் சிவலிங்கத்திற்குத் தங்கம்

4வது நாளில் இந்தியாவின் சதீஷ் சிவலிங்கம் ஆடவர் 70 கிலோ பளு தூக்குதலில் தங்கம் வென்றார்.

5வது நாளில் ஜித்து ராய்க்குத் தங்கம்

5வது நாளில் ஜித்து ராய்க்குத் தங்கம்

5வது நாளில் ஆடவர் 50 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடும் போட்டியில் ஜித்து ராய் தங்கம் வென்றார்.

6வது நாளில் 3 தங்கம்

6வது நாளில் 3 தங்கம்

6வது நாளில் 3 தங்கப் பதக்கங்களை இந்தியா வென்றது. ஆடவர் 75 கிலோ மல்யுத்தப் போட்டியில் சுஷில் குமார், 57 கிலோ பிரிவில் அமீத் குமார், மகளிர் மல்யுத்தப் போட்டியின் 48 கிலோ பிரிவில் வினேஷ் போகத்தும் தங்கம் வென்றனர்.

8வது நாளில் மேலும் 3 தங்கம்

8வது நாளில் மேலும் 3 தங்கம்

அதேபோல 8வது நாளில் மேலும் 3 தங்கங்களை இந்தியா வென்றது. ஆடவர் 65 கிலோ மல்யுத்தம் ப்ரீஸ்டைல் பிரிவில், யோகேந்திர தத் தங்கம் வென்றார். மகளிர் 55 கிலோ மல்யுத்தம் ப்ரீஸ்டைல் பிரிவில் பபிதா குமாரி, ஆடவர் டிஸ்கஸ் துரோவில் விகாஸ் கவுடா ஆகியோர் தங்கம் வென்றனர்.

11வது நாளில் தீபிகா, ஜோஷ்னாவுக்கு தங்கம்

11வது நாளில் தீபிகா, ஜோஷ்னாவுக்கு தங்கம்

11வது நாளில் இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா ஜோடி, மகளிர் ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கத்தைத் தட்டி வந்தது.

கடைசி நாளில் காஷ்யப்

கடைசி நாளில் காஷ்யப்

12வது நாளில் அதாவது கடைசி நாளில் ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் காஷ்யப்புக்கு தங்கம் கிடைத்தது.

ஆஸ்திரேலியாவில் அசத்துவார்களா

ஆஸ்திரேலியாவில் அசத்துவார்களா

அடுத்து ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும். டெல்லியில் அசத்தியதைப் போல கிளாஸ்கோவில் அசத்தத் தவறிய இந்தியா, கோல்ட் கோஸ்ட்டில் கலக்குமா என்பதை எதிர்பார்த்துக் காத்திருப்போம்.

Story first published: Tuesday, August 5, 2014, 14:22 [IST]
Other articles published on Aug 5, 2014
English summary
India won 15 gold medals at the 2014 Commonwealth Games which concluded on Sunday (August 3). The first gold came in weightlifting and final one in badminton. India finished with a total of 64 medals (15 Gold, 30 Silver, 19 Bronze) and were placed fifth at the end of the Games. Sanjita Chanu (weightlifting) brought India the first gold in Glasgow while Kashyap (badminton) won the yellow metal on the final day. (Read: Complete list of India's medal winners)
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X