உலகின் நம்பர்.2 வீரருக்கு "பெப்பே".. வில்வித்தையில் "வித்தை" காட்டிய இந்திய வீரர் - செம!

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், இந்திய வில்வித்தை வீரர் பிரவீன் ஜாதவ் உலகின் நம்பர்.2 வீரரை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் தொடரில், அமெரிக்கா, சீனா, ஜப்பான் இடையே பதக்கங்களை குவிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

பாய்மரப் படகுப் போட்டி.. லேசாக சறுக்கிய கணபதி மற்றும் வருண் ஜோடி.. 4வது ரேஸ் முடிவில் 19வது இடம்பாய்மரப் படகுப் போட்டி.. லேசாக சறுக்கிய கணபதி மற்றும் வருண் ஜோடி.. 4வது ரேஸ் முடிவில் 19வது இடம்

இந்தியாவை பொறுத்தவரை, பளுதூக்குதல் பிரிவில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். அதன்பிறகு இந்தியா தனது இரண்டாவது மெடலை எதிர்நோக்கியுள்ளது.

2ம் நிலை வீரர் தோல்வி

2ம் நிலை வீரர் தோல்வி

இந்நிலையில், இன்று வில்வித்தை போட்டிகள் நடைபெற்றன. இதில், இந்திய வீரர் பிரவீன் ஜாதவ், ரஷ்யாவைச் சேர்ந்த உலகின் 2ம் நிலை வில்வித்தை வீரர் Bazarzhapov-வை எதிர்கொண்டார்.

செட் - 1

பிரவீன் 2, பசார்ஜபோவ் 0

பிரவீன்: 10, 9, 10 (29)

பசார்ஜபோவ்: 9, 9, 9 (27)

செட் - 2

பிரவீன் 2, பசார்ஜபோவ் 0

பிரவீன்: 9, 9, 10 (28)

பசார்ஜபோவ்: 10, 10, 7 (27)

செட் - 3

பிரவீன் 2, பசார்ஜபோவ் 0

பிரவீன்: 9, 9, 10 (28)

பசார்ஜபோவ்: 8, 7, 9 (24)

என்ற புள்ளிகள் கணக்கில் பிரவீன் ஜாதவ் வென்றார்.

முதல் நிலை வீரர்

முதல் நிலை வீரர்

மூன்றாவது செட்டை 28-24 என்ற கணக்கில் வென்ற பிரவீன் ஜாதவ், அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதில், வில்வித்தையில் முதல் நிலை வீரரான அமெரிக்காவின் பிராடி எலிசனை சந்திக்கவிருக்கிறார். இன்னும் சற்று நேரத்தில் இந்த போட்டி தொடங்கவுள்ளது.

நம்பிக்கை தரும் வீரர்

நம்பிக்கை தரும் வீரர்

வறுமையான குடும்பப் பின்னணியில் இருந்து ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் அளவுக்கு முன்னேறி வந்திருக்கும் பிரவீன், நிச்சயம் மெடல் வெல்ல வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. மற்ற இந்திய வில்வித்தை வீரர்கள் சொதப்பிய நிலையில், பிரவீன் பெரும் நம்பிக்கை அளிக்கும் வீரராக விளங்குகிறார்.

இன்று சாதித்துவிட்டார்

இன்று சாதித்துவிட்டார்

அடிப்படையில் மிகவும் ஏழ்மை வாய்ந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த குடும்ப பின்னணியைக் கொண்ட பிரவீன், அதிக வெயிட் கொண்ட வில்லை தூக்கி கையில் நிறுத்துவதற்கே சிரமப்பட்டார். அந்தளவுக்கு வறுமையின் காரணமாக, சத்து இல்லாத நபராக வளர்ந்தவர் பிரவீன். அவரது பயிற்சியாளர் மூலம் வில்வித்தை போட்டியில் தொடர்ந்து பங்கேற்க ஊக்குவிக்கப்பட்டார். இதோ, இன்று உலகின் 2ம் நிலை வீரரையும் வீழ்த்தி அடுத்த சுற்றை எதிர்நோக்கியுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Pravin Jadhav knocks out Galsan Bazarzhapov - பிரவீன் ஜாதவ்
Story first published: Wednesday, July 28, 2021, 14:20 [IST]
Other articles published on Jul 28, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X