For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் பெண்கள் பேட்மிண்டன்.. 2வது போட்டியிலும் பிவி சிந்து வெற்றி.. ஹாங்காங் வீராங்கனை படுதோல்வி!

டோக்கியோ: ஒலிம்பிக்ஸ் பெண்கள் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு குழு ஆட்டத்தில் இன்று பிவி சிந்து ஹாங்காங்கின் சியான் நாங் இயை 21-9, 21-16 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார்.

ஒலிம்பிக்ஸ் பெண்கள் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தொடக்கத்தில் இருந்தே இந்தியாவின் பேட்மிண்டன் சூப்பர் ஸ்டார் பிவி சிந்து அசத்தி வருகிறார்.

2020 ஒலிம்பிக் புள்ளிகள் பட்டியல்.. 6 தங்கத்தோடு சீனா முதலிடம்.. 24வது இடத்திற்கு பின்தங்கிய இந்தியா 2020 ஒலிம்பிக் புள்ளிகள் பட்டியல்.. 6 தங்கத்தோடு சீனா முதலிடம்.. 24வது இடத்திற்கு பின்தங்கிய இந்தியா

பிவி சிந்து தற்போது குரூப் ஜேவில் விளையாடி வருகிறார். சர்வதேச அளவில் பேட்மிண்டன் பெண்கள் பிரிவில் 7வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் பிவி சிந்து தனது முதல் போட்டியில் இஸ்ரேலின் க்செனியா பொலிகர்போவாவை எதிர்கொண்டார்.

யார்?

யார்?

இந்த போட்டியில் பிவி சிந்து தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினார். இதன் மூலம் இஸ்ரேலின் க்செனியா பொலிகர்போவாவ 21-7, 21-10 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி பிவி சிந்து வெற்றிபெற்றார். இந்த நிலையில் இன்று பிவி சிந்துவின் இரண்டாவது ஆட்டம் நடைபெற்றது.

ஆதிக்கம்

ஆதிக்கம்

ஹாங்காங்கின் சியான் நாங் இயை இன்று பிவி சிந்து எதிர்கொண்டார். தொடக்கத்தில் இருந்தே சிந்து மிகவும் நம்பிக்கையோடு ஆடினார். அதிலும் முதல் செட்டில் ஹாங்காங்கின் சியான் நாங் இக்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல் சிந்து ஆதிக்கம் செலுத்தினார்.

வெற்றி

வெற்றி

முதல் சுற்றை மிக எளிதாக 21-9 என்ற புள்ளிகள் கணக்கில் சிந்து கைப்பற்றினார். அதன்பின் இரண்டாவது சுற்று ஆட்டம் கொஞ்சம் விறுவிறுப்பாக சென்றது. ஹாங்காங்கின் சியான் நாங் இ கொஞ்சம் டப் கொடுத்தார். முதல் 9 புள்ளிகள் வரை ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது.

 தொடர் வெற்றி

தொடர் வெற்றி

ஆனால் அதன்பின் மீண்டும் பிவி சிந்து ஆதிக்கம் செலுத்தினார். இரண்டாவது செட்டையும் 21-16 என்ற புள்ளி கணக்கில் சிந்து வென்றார். ஹாங்காங்கின் சியான் நாங் இயை 21-9, 21-16 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி சிந்து வெற்றிபெற்றுள்ளார். தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வென்று பிவி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

Story first published: Wednesday, July 28, 2021, 12:42 [IST]
Other articles published on Jul 28, 2021
English summary
Olympics 2020: PV Sindhu wins her second game against Hong Kongs CHEUNG Ngan Yi with 221-9, 21-16 oints
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X