For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரோஜர் பெடரரின் மறுப்பக்கம்.. கடலூரில் பெடரரின் நெகிழ்ச்சி பயணம்.. இவ்வளவு நல்லவரா ?

சென்னை: டென்னிஸ் ஜாம்பவான் ஃபெடரர், தனது ஓய்வு முடிவை அறிவித்து ரசிகர்களை சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாக்கிவிட்டு சென்றுள்ளார்.

Recommended Video

ரோஜர் ஃபெடரரின் ஓய்வுக்கு பிரியாவிடை சொன்ன இந்திய கிரிக்கெட் வீரர்கள்

கிரிக்கெட்டுக்கு சச்சின் எப்படியோ, அப்படி தான் டென்னிஸ்க்கு ரோஜர் ஃபெடரர். பெடரரின் சாதனைகள் இன்று முறியடிக்கப்பட்டு இருக்கலாம்.

ஆனால், ரசிகர்களின் மனதில், அவர் பிடித்த இடத்தை வேறு யாராலும் பிடிக்க முடியாது. காரணம், டென்னிஸ் களத்திலும் சரி, வெளியிலும் சரி, அவருடைய நன்னடத்தையை கண்டு ஆச்சரியப்படாதவர்களே இல்லை.

வயதோ 40.. பெரிய அறுவை சிகிச்சை.. நீண்ட காலம் விளையாட முடியாது - ரோஜர் ஃபெடரர் உருக்கம்வயதோ 40.. பெரிய அறுவை சிகிச்சை.. நீண்ட காலம் விளையாட முடியாது - ரோஜர் ஃபெடரர் உருக்கம்

ஏழை குழந்தைகளுக்காக செலவு

ஏழை குழந்தைகளுக்காக செலவு

உலகின் மிகப் பெரிய பணக்காரர் விளையாட்டு வீரர், நம்பர் 1 வீரர் என்ற அனைத்து கிரீடமும் அவர் தலையில், இருந்தாலும் தலைக்கணம் இருந்ததே இல்லை. எவ்வளவு பெரிய உச்சத்தை தொட்டாலும் பழைய வாழ்க்கையை மறக்க கூடாது என்பது ஃபெடரின் தத்துவமாக இருந்தது. ரோஜர் ஃபெடரர் விளையாட்டு மூலம் பெற்ற பணத்தை ஏழை குழந்தைகளுக்காக செலவிட்டார்.

ஆப்பிரிக்க நாட்டுக்கு உதவி

ஆப்பிரிக்க நாட்டுக்கு உதவி

குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் குழந்தைகளின் கல்வி, மருத்துவம் விளையாட்டிற்காக பெடரர் பெருமளவில் அள்ளி கொடுத்தார். ஓய்வு நேரத்தில் ஃபெடரர், ஆப்பிரிக்க நாட்டுக்கு சென்று குழந்தைகளுக்கு தன்னுடைய உதவி கிடைக்கிறதா என்று ஆய்வும் செய்வார். இதே போன்று ஃபெடரரின் தமிழ்நாட்டு பயணம், இங்கு பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கடலூரில் ஃபெடரர்

கடலூரில் ஃபெடரர்

சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்த காலம். 2006 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் காலக்கட்டத்தில் ரோஜர் ஃபெடரர் கடலூரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட இடத்தை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக வந்து பார்வையிட்டார். அப்போது சுனாமியால் தாய் தந்தை இழந்த குழந்தைகள் வசகிக்கும் இடத்தை பார்வையிட்ட ஃபெடரர், அங்கு குழந்தைகளுக்கு நல்ல தண்ணீர் கிடைக்கிறதா என்பதை குடித்து பார்த்தார்.

ஃபெடரரின் இன்ப அதிர்ச்சி

ஃபெடரரின் இன்ப அதிர்ச்சி

அப்போது அங்கிருந்த 3 வயது பெண் குழந்தை அபிநயாவுடன் ரோஜர் பெடரர் கொஞ்சி விளையாடிய காட்சி காலத்தால் அழியாதவை. மேலும், அங்குள்ள குழந்தைகளுடன் பெடரர் கிரிக்கெட் விளையாடினார். இதே போன்று ஒரு முறை, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு சிறுவன், நீங்கள் நிறைய ஆண்டுகள் விளையாட வேண்டும். உங்களுடன் நான் பெரியவனாக பிறகு போட்டியிட வேண்டும் என்று கூநினார். இதற்கு ஓகே சொன்ன ஃபெடரர், சரியாக 7 ஆண்டுகள் கழித்து. அந்த சிறுவனை அழைத்து ரோஜர் ஃபெடரர் டென்னிஸ் விளையாடி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இனி டென்னிஸ் உலகில் ஃபெடரர் போன்ற வீரரை நாம் பார்க்கப்போவது இல்லை.

Story first published: Friday, September 16, 2022, 15:40 [IST]
Other articles published on Sep 16, 2022
English summary
Ram Charan for Oscars trending in Twitter after Variety magazine people choice reports had Ram Charan name in the best actors choice for Oscars 2023 list.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X