For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஊக்க மருந்து சர்ச்சை.. ரியோ ஒலிம்பிக்கிலிருந்து மல்யுத்த வீரர் நரசிங் அவுட்.. பிரவீண் ராணா சேர்ப்பு

டெல்லி: ஊக்கமருந்து சோதனையில் சி்க்கிய மல்யுத்த வீரர் நரசிங் யாதவிற்கு பதிலாக பிரவீண் ராணா ரியோ ஒலிம்பிக்கிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருந்த இந்திய மல்யுத்த வீரர் நார்சிங் யாதவிடம் (74 கிலோ) சமீபத்தில் ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த பரிசோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.

Rana replaces Narsingh YADAV in Rio Olympic

இதனால் நார்சிங் யாதவ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் நர்சிங் யாதவ் தான் ஊக்க மருந்து எதுவும் பயன்படுத்தவில்லை. இந்திய விளையாட்டு ஆணையத்தின் (சாய்) அதிகாரி உள்பட ஒரு சிலரின் சதி காரணமாக தனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று நார்சிங் யாதவ் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், தற்போது நரசிங் யாதவிற்குப் பதிலாக மற்றொரு இந்திய வீரர் பிரவீண் ராணா (74 கிலோ) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது பெயர் ரியோ ஒலிம்பிக் கமிட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, July 27, 2016, 10:15 [IST]
Other articles published on Jul 27, 2016
English summary
Parveen RANA as India’s replacement at 74kg in men’s freestyle after 74kg freestyle wrestler Narsingh YADAV has failed an anti-doping test.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X