For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

26 வயதில் எண்ண முடியாத சாதனை.. வாழும் கொடையாளி.. அசர வைக்கும் அங்கிதாவின் கதை!

போபாலை சேர்ந்த அங்கிதா ஸ்ரீவஸ்தவா என்ற 26 வயது பெண்மணி உலகில் யாரும் செய்யாத பல சாதனைகளை செய்து உள்ளார்.

போபால்: போபாலை சேர்ந்த அங்கிதா ஸ்ரீவஸ்தவா என்ற 26 வயது பெண்மணி உலகில் யாரும் செய்யாத பல சாதனைகளை செய்து உள்ளார்.

உலக சாதனைக்கு சொந்தக்காரர், வாழும் கல்லீரல் கொடையாளி, தொழில்முனைவர், கணிப்பொறி என்ஜினியர், புத்தகம் வெளியிட்ட எழுத்தாளர், இப்படி பல சாதனைகளை வெறும் 26 வயதில் செய்தவர்தான் அங்கிதா ஸ்ரீவஸ்தவா. ஆம் இவர் நீளம் தாண்டுதல் மற்றும் பந்து எறிதல் போட்டி இரண்டிலும் உலக சாதனை படைத்தவர்.

Record holder, liver donor and more: Ankita Shrivastava became a great achiever at the Age of 26

ஒலிம்பிக் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட உலக மாற்று விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு இவர் இந்த சாதனையை படைத்தார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இவர் தன்னுடைய உடலில் 74% கல்லீரலை தன்னுடைய அம்மாவிற்கு ஏற்கனவே தானம் செய்துவிட்டார்.

அதுவும் இப்போது அல்ல, இவர் 20 வயத்தில் இருக்கும் போதே தன்னுடைய கல்லீரலை தானம் செய்துவிட்டார். உயரம் தாண்டுதலில் 2 தங்கம், பந்து எறிதலில் இரண்டு தங்கம், 100 மீட்டர் ஓட்டத்தில் சில்வர் என்று அங்கிதா நிறைய சாதனைகளை செய்துள்ளார். இவ்வளவு சாதனைகளை விளையாட்டு உலகில் ஒருங்கே செய்த முதல் வீராங்கனை இவர்தான்.

2014ல் இவர் தன்னுடைய கல்லீரலை தானம் செய்த பின் இரண்டு மாதம் படுத்த படுக்கையாக இருந்தார். இந்தியாவிலேயே இவர்தான் வயது குறைவான கல்லீரல் கொடையாளி என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் இவர் அப்படியே விடவில்லை. மருத்துவமனை கட்டிலில் இருந்து எழுந்தவர் மீண்டும் விளையாட தொடங்கினர்.

அதனின் தினமும் பல மணி நேரம் கடுமையாக பயிற்சி செய்தார். உடலில் செய்யப்பட்ட சிகிச்சையை மறந்து மிக தீவிரமாக பயிற்சி செய்து இயல்பு நிலைக்கு திரும்பினார். ஆனால் அதற்காக அவர் பல உடல் ரீதியான கஷ்டங்களை கடந்து வர வேண்டி இருந்தது. அவரின் குடும்பமும், நண்பர்களும் அந்த வீராங்கனை அங்கிதா இவ்வளவு உயரத்தை அடைய காரணமாக இருந்தனர்.

போபாலை சேர்ந்த இவர் தினமும் பல மணி நேரங்கள் கடுமையான பயிற்சிகளை செய்து மீண்டும் தனது உடல் பிட்னஸை கொண்டு வந்தார். ஒலிம்பிக் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட உலக மாற்று விளையாட்டு போட்டியில் மொத்தம் 59 நாடுகளில் இருந்து 2027 பேர் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் இருந்து கலந்து கொண்டவர்களில் ஒருவராக அங்கிதாவும் இடம்பிடித்தார். இந்தியாவில் இருந்து கலந்து கொண்டவர்களில் மிகவும் இளமையான வீராங்கனை இவர்தான். அந்த தொடரில் இந்தியா வென்ற 6 மெடல்களில் இவர் மட்டும் வென்றது 3. ஆனால் அவரின் சாதனைகள் அதோடு முடியவில்லை.

அங்கிதா ஒரு தொழில்முனைவோர். ஆம் அதோடு அங்கிதா 19 வயதிலேயே புத்தகம் எழுதியுள்ளார். தேசிய அளவில் இவர் நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். கணிப்பொறி பொறியியல் படித்துள்ளார். அதேபோல் இவரின் பெயர் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்து இருக்கிறது. அதேபோல் இவர்களின் குடும்ப நிறுவனமான ஆதர்ஷ் பிரைவேட் லிமிடேட் நிறுவனத்தையும் இவர் கவனித்துக் கொள்கிறார்.

ஆதர்ஷ் பிரைவேட் லிமிடேட் இந்தியாவில் மிகப்பெரிய அச்சிடுதல் மற்றும் வெளியிடுதல் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்தியாவில் பார்பி பொம்மை, பென் 10 ஆகியவற்றிக்கு இவர்கள்தான் வெளியீட்டு பங்குதாரர்கள். டிஸ்னி நிறுவனத்தின் அதிகாரபூர்வ வெளியீட்டாளர்கள் இவர்கள்தான்.

இவர்கள் உருவாக்கிய பர்பிள் டர்ட்டிள் Purple Turtle எனப்படும் அறிவுசார் சொத்து நிறுவனம் தற்போது உலகம் முழுக்க 29 நாடுகளில் பரவி இருக்கிறது. அதேபோல் அந்த நிறுவனம் வெளியிடும் கல்வி சார்ந்த நூல்கள், வெளியீடுகள் எல்லாம் இந்தியா மற்றும் நேபாளில் 14 பள்ளிகளில் பயன்படுத்தப்படுகிறது.

பிரபலமான அனிமேஷன் தொடரான 52 x7' 2D தொடரில் அங்கிதாதான் எக்சிகியூடிவ் புரொடியூசர். அதேபோல் இந்தியா முழுக்க பல்வேறு சமூக செயல்பாடுகளில் இவர் தூதராக செயல்பட்டு இருக்கிறார். மேலும் DSYW and CII's Indian Women Network ஆகிய அமைப்புகளில் இவர் கவுரவ உறுப்பினராகவும் இருக்கிறார்.

இதை எல்லாமும் அவர் வெறும் 26 வயதில் சாதித்து இருக்கிறார்.. சாதனை பெண்மணி அங்கிதா ஸ்ரீவஸ்தவாவிற்கு ஒரு சல்யூட்!

Story first published: Monday, November 18, 2019, 17:45 [IST]
Other articles published on Nov 18, 2019
English summary
A world record holder, a live liver donor, entrepreneur, computer science engineer and published author. All this and she is just 26 years of age.This is Ankita Shrivastava, a world record holder in long jump and ball throw at the World Transplant Games organised by the Olympic Association.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X