நீரஜ் சோப்ராவுக்கு “பத்ம ஸ்ரீ” விருது.. விளையாட்டு துறையில் இருந்து தேர்வான 9 பேர் - முழு விவரம்

டெல்லி: கடந்த 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்று அசத்தினார் நீரஜ் சோப்ரா.

நாட்டின் 73வது குடியரசு தினத்தையொட்டி பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன், பத்ம பூஷன் உள்ளிட்ட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

“அமீரகம் தராத 3 நல்ல விஷயங்கள்” ஐபிஎல் தொடருக்காக தென்னாப்பிரிக்கா தந்த ஆஃபர்.. சிந்திக்கும் பிசிசிஐ “அமீரகம் தராத 3 நல்ல விஷயங்கள்” ஐபிஎல் தொடருக்காக தென்னாப்பிரிக்கா தந்த ஆஃபர்.. சிந்திக்கும் பிசிசிஐ

அதன்படி இந்தாண்டு மொத்தம் 128 பேருக்கு, பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த உயரிய விருதுகள் வழங்கப்படவுள்ளன.

 பத்ம விருதுகள் அறிவிப்பு

பத்ம விருதுகள் அறிவிப்பு

இதில் விளையாட்டு வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். அபினவ் பிந்த்ராவுகுக்கு அடுத்தபடியாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற 2வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

 உயரிய விருது

உயரிய விருது

இதனையடுத்து நீரஜுக்கு பரிசு மழை குவிந்து வந்த நிலையில் தற்போது நாட்டின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து சுமித் அண்டில், பிரமோத் பாஹட், அவானி லெகஹரா, ஃபைசல் அலி, சங்கரநாராயண மேனன், பிரமானந்த் சன்ங்கல்வார், வந்தனா கட்டாரியா என மொத்தம் 8 பேருக்கு விளையாட்டு துறையின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

 பத்ம பூஷன்

பத்ம பூஷன்

இதே போல பாராலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்திய தேவ்ந்த்ரா ஜாஜ்ஹரியாவுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாரலிம்பிக்கில் 2 தங்கப்பதங்களை வென்ற முதல் இந்தியர் இவரே ஆகும். இவர்களுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த விருதுகள் வழங்கப்படும்.

பரம் விசிஷ்ட் சேவா விருது

பரம் விசிஷ்ட் சேவா விருது

முன்னதாக இன்று மாலை நீரஜ் சோப்ராவுக்கு பரம் விசிஷ்ட் சேவா விருது அறிவிக்கப்பட்டிருந்தது. நீரஜ் இந்திய ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றி வருகிறார். இதனையடுத்து அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Padma awards 2022 is announced, Olympians Neeraj Chopra, Pramod Bhagat Honoured with Padma Shri award
Story first published: Tuesday, January 25, 2022, 21:33 [IST]
Other articles published on Jan 25, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X