For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரியோ ஒலிம்பிக்ஸ்: வாவ், வவ்வாவ், கூல், அய்யய்யோ, என்ன கொடுமை சரவணா தருணங்கள்!

By Siva

சென்னை: ரியோடிஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தபோது மறக்க முடியாத சில சம்பவங்களும் நடந்தன.

பிரேசிலில் உள்ள ரியோடிஜெனீரோ நகரில் கடந்த 5ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடந்தன. இந்த போட்டிகளில் இந்தியாவுக்கு ஒரு வெண்கலம் மற்றும் ஒரு வெள்ளி என மொத்தம் இரண்டு பதக்கங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளின் போது நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை பார்ப்போம்.

ஓட்டப்பந்தய வீராங்கனைகள்

பெண்களுக்கான 5000 மீட்டர் தூர ஓட்டப் பந்தயத்தின் 2-வது அரையிறுதியில் அமெரிக்காவின் அபி டி'அகோஸ்டினோ, நியூசிலாந்தின் நிக்கி ஹம்ப்ளின் ஆகியோர் கலந்து கொண்டனர். ஓடும்போது அவர்கள் மோதிக் கொண்டதில் அமெரிக்க வீராங்கனை கீழே விழுந்து காயம் அடைந்தார். உடனே நிக்கி ஓட்டத்தை நிறுத்திவிட்டு அவருக்கு உதவி செய்து மக்களின் மனங்களில் இடம்பிடித்துவிட்டார். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொண்ட அவர்களை பாராட்டி பியர்ரி டீ கூபர்டீன் விருது வழங்கப்படுகிறது.

கொரிய வீராங்கனைகளின் செல்ஃபி

கொரிய வீராங்கனைகளின் செல்ஃபி

வட கொரியாவும், தென் கொரியாவும் கீரியும், பாம்புமாக இருக்கிறது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளின்போது தென் கொரிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை லீ என் ஜூவும், வட கொரியாவின் உன் ஜாங்கும் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

பயிற்சியாளர் பாட்டி

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த வேட் வான் நீகெர்க் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார். அவருக்கு 74 வயதான ஆன்னா போதா என்கிற கொள்ளு பாட்டி தான் பயிற்சி அளித்து அசத்தியுள்ளார்.

பிகினி

பிகினி

பீச் வாலிபால் போட்டியில் ஜெர்மனி வீராங்கனை கிரா வால்கன்ஹோர்ஸ்ட் பிகினியில் இருக்க எகிப்தை சேர்ந்த டோவா எல்கோபாஷி என்பவர் புர்கா அணிந்து விளையாடியபோது எடுத்த புகைப்படம் வைரல் ஆனது.

என்னை திருமணம் செய்வாயா?

என்னை திருமணம் செய்வாயா?

சீனாவை சேர்ந்த நீச்சல் வீராங்கனை ஹீ ஜி வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் பதக்கம் வென்ற கையோடு சீனாவை சேர்ந்த நீச்சல் வீரர் கின் கை வைர மோதிரத்தை கொடுத்து தன்னை திருமணம் செய்ய சம்மதமா என்று கேட்டு அசத்தினார்.

குவைத் வீரர்

குவைத் வீரர்

குவைத்தை சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரரான பெஹைத் அல் தீஹானி தங்கப் பதக்கம் வென்றார். குவைத்தை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி சஸ்பெண்ட் செய்துள்ள நிலையில் தீஹானி நாடு சாராத வீரராக கலந்து கொண்டார். நாடு சாரா வீரர் ஒருவர் தங்கம் வென்றுள்ளது இதுவே முதல் முறை ஆகும்.

நீச்சல் குளம்

ஒலிம்பிக் போட்டிகளுக்காக மரியா லென்க் அக்வாடிக்ஸ் சென்டரில் கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் நீர் திடீர் என்று பச்சை நிறத்தில் மாறியது. அதன் பிறகு பச்சை நிறத்தில் இருந்து நீல நிறமாக மாறி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. யாரோ நீரில் 80 லிட்டர் ஹைட்ரஜன் பெராக்சைடை கலந்ததால் நீர் பச்சை நிறமாக மாறியதாக ரியோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

அக்ஷய் குமார் பாடல்

மெக்சிகோவவை சேர்ந்த நீச்சல் வீரர்கள் குழு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் அய் லா ரே பாடலுக்கு ஏற்றவாறு ஆடி மக்கள் மனதை கொள்ளையடித்தது.

Story first published: Wednesday, August 24, 2016, 12:05 [IST]
Other articles published on Aug 24, 2016
English summary
Above are the unforgettable moments of the recently concluded Rio Olympics 2016.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X