For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரியோ பாரா ஒலிம்பிக்ஸ்: 1500 மீ ஓட்டப்போட்டி தகுதிச்சுற்றில் அன்குர் தமா 2ம் இடம்

By Mayura Akilan

ரியோ: பிரேசிலில் நடைபெறும் பாராலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 1,500 மீட்டர் ஓட்டப் பந்தய தகுதிப்போட்டியில் இந்தியாவின் அன்குர் தமா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில், 31வது ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடந்து முடிந்தது. இதன்பின் தற்போது, மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ளன. ஒலிம்பிக் போட்டிகளைப்போல,பாரா ஒலிம்பிக் போட்டிகளிலும் இதுவரை இல்லாதளவில், இந்தியா சார்பில் 17 வீரர், வீராங்கனைகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

Rio Paralympics 2016: Ankur Dhama finishing second in men's 1500m T1

இதில் சனிக்கிழமை நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கமும், பாடி வருண் சிங் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

இன்று நடந்த 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் தகுதிச் சுற்றில் இந்தியாவின் அன்குர் தமா சுற்று 1ல் கலந்து கொண்டார். இதில் 4 நிமிடம் 37.61 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

அன்குர் தாமா, 22 பார்வையிழந்த தடகள வீரர் ஆவார். இவர் இந்தியா சார்பில் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கும் பார்வையிழந்த முதல் தடகள வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

Story first published: Monday, September 12, 2016, 8:46 [IST]
Other articles published on Sep 12, 2016
English summary
India's Ankur Dhama bowed out of the first round of the men's 1500 metre T1 event despite finishing second in his heat at the Paralympic Games at Rio de Janeiro on Sunday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X