For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாரா ஒலிம்பிக்: ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் ஜஜாரியா தங்கம் வென்று சரித்திர சாதனை!!

By Madhivanan

ரியோ: ரியோடிஜெனிரோவில் நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா தங்கம் வென்று சரித்திர சாதனை படைத்திருக்கிறார். பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு 2-வது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்து, தற்போது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு முதலாவது தங்கப் பதக்கம் வென்று சரித்திரம் படைத்தார்.

இன்று ஈட்டி எறிதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் தேவேந்திர ஜஜாரியா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

2-வது தங்கம்

2-வது தங்கம்

எப்ஃ46 பிரிவில் தேவேந்திர ஜஜாரியா 63.97 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 2-வது தங்கத்தை தட்டிச் சென்றுள்ளது.

இடது கை அகற்றம்

இடது கை அகற்றம்

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் தேவேந்திர ஜஜாரியா. சிறுவயதில் ஏற்பட்ட விபத்தில் ஜஜாரியாவின் இடதுகை அகற்றப்பட்டது.

தனது சாதனையை தானே முறியடித்தவர்

தனது சாதனையை தானே முறியடித்தவர்

2004 பாரா ஒலிம்பிக்கில் 62.15மீ., தூரம் எறிந்து தங்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியா, ரியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் 63.97 மீ., தூரம் வீசி தனது உலக சாதனையை தானே முறியடித்துள்ளார்.

2 தங்கப் பதக்கம் வென்ற ஜஜாரியா

2 தங்கப் பதக்கம் வென்ற ஜஜாரியா

இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 2 தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா எனும் சாதனையையும் படைத்துள்ளார்.

Story first published: Wednesday, September 14, 2016, 8:36 [IST]
Other articles published on Sep 14, 2016
English summary
India's Devendra Jhajharia bettered his own world record to win gold in the men's javelin throw F46 event at the 2016 Rio Paralympics. Devendra won gold in the javelin event at the 2004 Athens Paralympics with a record throw of 62.15 metres, becoming only the second gold medallist at the Paralympics for his country.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X