For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பீஸா ரெடியா.. டீ போட்டாச்சா.. ரக்பி ஆட வேண்டிய கைகள் என்ன பண்ணிட்டிருக்கு பாருங்க மக்களே!

மாட்ரிட் : ஐரோப்பிய நாடுகள் ஒட்டுமாத்தமாக முடங்கிப் போயுள்ளன. காரணம் இந்த கொரோனா வைரஸ் பரவல்தான். இந்த நிலையில் ரக்பி வீரர்கள் பலர் படு வித்தியாசமாக பொழுதைக் கழித்துக் கொண்டுள்ளனர்.

வீட்டோடு முடங்கிப் போய் விட்ட பலருக்கும் ஆபத்பாந்தவனாக கை கொடுப்பது சமையல்தான். பெரும்பாலான வீரர்கள், வீராங்கனைகள் வீட்டில் விதம் விதமா சமைத்து சாப்பிட்டு பொழுது போக்குகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளில் பிரபலமானது கால்பந்து. அடுத்து பிரபலமானது ரக்பி விளையாட்டுதான். ரக்பி ஆட்டக்காரர்கள் பலரும் இப்போது சமையலில் குதித்துள்ளனர்.

துருக்கி குத்துச்சண்டை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு... ஐஓசி மீது குற்றச்சாட்டுதுருக்கி குத்துச்சண்டை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு... ஐஓசி மீது குற்றச்சாட்டு

பீட்சா செய்யலாமே

பீட்சா செய்யலாமே

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சர்வதேச வீரர் ஸ்காட் ஹிக்கின்பாதம் போர்டியாக்ஸ் பெக்லஸ் அணிக்காக ரக்பி ஆடுபவர். இவர் தற்போது சமையலில் படு பிசியாகி விட்டார். மார்ச் 17ம் தேதி முதல் இவர் பிரான்சில் உள்ள வீட்டில் அடைபட்டுக் கிடக்கிறார். ஆனாலும் விடாமல் பீட்சா செய்வது, டீ போடுவது என சமையல் அறையை ஒரு வழி செய்து கொண்டுள்ளார் ஹிக்கின்பாதம்.

ஷிப்ட் போட்டு செய்கிறோம்

ஷிப்ட் போட்டு செய்கிறோம்

இதுகுறித்து ஹிக்கின்பாதம் கூறுகையில், நானும் எனது மனைவியும் டர்ன் போட்டு சமையல் வேலைகளைச் செய்து வருகிறோம். நிறைய சமைக்கிறோம். விதம் விதமாக சமைக்கிறோம். நானே எனது பீட்ஸாவை செய்து சாப்பிட்டேன். சும்மா சொல்லக் கூடாது. நல்லாவே இருந்துச்சு. பீட்ஸா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுவும் நானே எனக்காக செய்த பெரிய பீட்ஸா சூப்பர் என்று தன்னைதானே பாராட்டுகிறார் ஹிக்கின்பாதம்.

என்ன செய்தாலும் நல்லாருக்கே

என்ன செய்தாலும் நல்லாருக்கே

பிறகு மிளகாய் பொடி தூவிய கான் கிரேன் செய்து சாப்பிட்டேன். நம்ப மாட்டீங்க.. அதுவும் நல்லாருந்துச்சு. எனக்காக எது செய்தாலும் அது நல்லாதான் இருக்கும் போல என்று காமெடியாக கூறி கலகலப்பை ஏற்படுத்தியுள்ளார் அவர். இதேபோலத்தான் மேலும் பல வீரர்களும் சமையல் கலையில் கை தேர்ந்தவர்களாக மாறிக் கொண்டுள்ளனர்.

சொதப்பல் டீன் பட்

சொதப்பல் டீன் பட்

நியூசிலாந்தில் பிறந்தவரான டீன் பட் வடக்கு இத்தாலியில் உள்ல டிரவெசியா அணிக்காக ஆடி வருகிறார். அங்கு கடந்த 2 வாரங்களாக மக்கள் வீடுகளுக்குள் அடைந்து கிடக்கின்றனர். இதுகுறித்து பட் கூறுகையில், நான் ஊறுகாய் தடவிய எக்பிளான்ட் செய்து சாப்பிட்டேன். இன்னும் கொஞ்சம் பெட்டராக செய்திருக்கலாம். அதேபோல ஹாட் சாஸ் செய்யவும் முயற்சித்தேன். அதுவும் சொதப்பிடுச்சு என்று உச்சு கொட்டுகிறார்.

கெம்பூச்சாவும் செய்தாரே

கெம்பூச்சாவும் செய்தாரே

அத்தோடு விட்டாரா பார்ட்டி.. கெம்பூச்சாவும் செய்துள்ளார். அதாங்க கிரீன் டீ. அது நல்லாருந்துச்சு. சுறுசுறுப்பாகவும் என்னை மாற்றியது. ஆனால் டைமிங்தான் ஜஸ்ட் மிஸ். எனவே அடுத்த முறை நல்லா செய்யனும் என்று கூறியுள்ளார் பட். இவர் சமையலில் இன்னும் போக வேண்டிய தூரம் இருக்குங்க. அதுவரைக்கும் டீயோடு நிற்பது நல்லதுதான்.

வீட்டுக்குள்ளேயே ஓடும் பட்

வீட்டுக்குள்ளேயே ஓடும் பட்

அஸ்ஸுரி அணியின் வீரர் செகன்ட்ரோ பட் தனது காதலி அமெலியா ரோஜர்ஸுடன் வசித்து வருகிறார். இவருக்கு உடலை பிட் ஆக வைத்துக் கொள்ள இந்த பிரேக் உதவுவதாக கூறியுள்ளார். காரணம், கொஞ்சம் விட்டு விட்டால் கூட உடம்பு போட்டு விடும். சிக்கலாகி விடும் என்பது இவரது கருத்து. இதனால் என்ன செய்கிறார் என்றால் வீட்டுக்குள்ளேயே ஓடுகிறாராம். கதவு நிலைப்படியை பிடித்து தொங்குகிறாராம்.. இதுபோல செய்து உடற்பயிற்சி செய்வதாக கூறுகிறார்.

இப்படி ஒவ்வொருவரும் விதம் விதமாக பொழுதைப் போக்குகின்றனர்.. ஆனால் எல்லோருடைய மனதிலும் நிலவும் ஒரே கவலை.. எப்படா இந்த கொரோனாவைரஸ் ஒழியும் என்பதுதான். நியாயம்தானே.

Story first published: Thursday, March 26, 2020, 16:35 [IST]
Other articles published on Mar 26, 2020
English summary
Euroepon Rugby players are doing some cooking in kitchen due to lock down
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X