For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காமன்வெல் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் மாற்றுத் திறனாளி வீரர்

காமன்வெல்த் பாரா பளுதூக்குதல் ஆடவர் ஹெவிவெயிட் பிரிவில், இந்தியாவின் மாற்றத் திறனாளி வீரரான சச்சின் சவுத்ரி வெண்கலம் வென்றார். காமன்வெல்த் போட்டியில் இந்திய மாற்றுத்திறனாளி வீரர் பதக்கம் வெல்வது இதுவே

கோல்ட் கோஸ்ட்: காமன்வெல்த் பாரா பளுதூக்குதல் ஆடவர் ஹெவிவெயிட் பிரிவில், இந்தியாவின் மாற்றத் திறனாளி வீரரான சச்சின் சவுத்ரி வெண்கலம் வென்றார். காமன்வெல்த் போட்டியில் இந்திய மாற்றுத்திறனாளி வீரர் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21-ஆவது காமன்வெல்த் போட்டிகள் நடந்து வருகின்றது. வரும் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டியில் இந்தியா உள்பட 71 நாடுகளைச் சேர்ந்த 6,700 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

Sachin wins bronze for India in the CWG

முதல் நாளில், மகளிர் பளுதூக்குதலில் மீராபாய் சானு தங்கம், குருராஜா வெள்ளி வென்றனர். இரண்டாவது நாளில், பளு தூக்குதலில் சஞ்சிதா சானு புதிய சாதனையுடன் தங்கம், 18 வயதாகும் தீபக் லேதர் வெண்கலம் வென்றனர். மூன்றாவது நாளில் பளுதூக்குதலில் வேலூரைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் தங்கம், ரகலா வெங்கட் ராகுல் தங்கம் வென்று அசத்தினார். மூன்று நாட்களில் நான்கு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என, மொத்தம் 6 பதக்கங்கள் கிடைத்தன.

நான்காவது நாளில் மகளிர் பளு தூக்குதலில் பூனம் யாதவ் தங்கம், துப்பாக்கி சுடுதலில் 11-ம் வகுப்பு மாணவி மனு பாக்கர் தங்கமும், ஹீனா சித்து வெள்ளியும், 10 மீட்டர் ஆடவர் ஏர் ரைபிள்ஸ் பிரிவில் ரவிக்குமார் வெண்கலமும் வென்றனர். பளுதூக்குதலில் விகாஸ் தாகுர் வெண்கலம் வென்றார். அதைத் தொடர்ந்து மகளிர் டேபிள் டென்னிஸ் அணி தங்கம் வென்றது.

ஐந்தாவது நாளான நேற்று ஆடவருக்கான 105 கிலோ பளுதூக்குதல் பிரிவில் பிரதீப்சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் ஜித்து ராய் தங்கப் பதக்கத்தையும், ஓம் மிதர்வால் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். பின்னர் ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி தங்கம் வென்றது. பாட்மின்டனில் இந்திய அணி தங்கம் வென்றது. அதையடுத்து இந்தியாவுக்கு 10 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என, 19 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

போட்டியின் ஆறாவது நாளான இன்று, மகளிர் துப்பாக்கி சுடுதலில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ஹீனா சிந்து தங்கம் வென்று அசத்தினார். இது இந்தியாவுக்கு கிடைத்துள்ள 11வது தங்கமாகும்.

இந்த நிலையில், பாரா பளுதூக்குதலில், ஆடவர் ஹெவிவெயிட் பிரிவில், இந்திய மாற்றுத் திறனாளி வீரர் சச்சின் சவுத்ரி, தனது மூன்றாவது முயற்சியில் 201 கிலோ தூக்கினார். இதன் மூலம் 188.7 புள்ளிகள் பெற்ற அவர் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 11 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் என, 21 பதக்கங்கள் கிடைத்துள்ளன. காமன்வெல்த் பாரா விளையாட்டில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

Story first published: Tuesday, April 10, 2018, 17:35 [IST]
Other articles published on Apr 10, 2018
English summary
Sachin Chaudhary win bronze in para powerlifting in CWG
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X