For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சச்சின் பரிசளித்த பிஎம்டபிள்யூ காரை பயன்படுத்த மாட்டேன்.. சாக்ஷி மாலிக் அதிரடி!

By Veera Kumar

டெல்லி: சச்சின் பரிசளித்த பிஎம்டபிள்யூ காரை தான், பயன்படுத்தபோவதில்லை என்று மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக்கில் இந்திய சார்பில் பேட்மின்டன் வீராங்கனை சிந்து வெள்ளியும், மல்யுத்த வீராங்கனை சாஷி மாலிக் வெண்கல பதக்கமும் வென்றனர். மொத்தமே இந்தியாவுக்கு இந்த இரண்டு பதக்கங்கள்தான் கிடைத்தன.

இதில் வெண்கல பதக்கம் வென்ற சாஷி மாலிக்கிற்கு ஹரியான மாநில அரசு 2.5 கோடி ரூபாயும், டெல்லி அரசு 1 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கின. பரிசுகள் குவிந்து வருகின்றன.

பாராட்டுக்கள்

பாராட்டுக்கள்

நாடு முழுக்க இவ்விரு வீராங்கனைகளுக்கும் பாராட்டும், பரிசு மழையும் பொழிகிறது. இந்நிலையில்தான் சாக்ஷி மாலிக் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

பிஎம்டபிள்யூ கார்

பிஎம்டபிள்யூ கார்

ரியோ ஒலிம்பிக்கில் சாதித்த சிந்து, சாஷி மாலிக், தீபிகா கர்மாகர் மற்றும் சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோரை கவுரவப்படுத்தும் விதமாக ஹைதராபாத் பேட்மின்டன் சங்கத்தலைவர் சாமுண்டேஷ்வர், அவர்களுக்கு பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்க முடிவு செய்தார்.

டெண்டுல்கர் வழங்கினார்

டெண்டுல்கர் வழங்கினார்

ஆனால் இக்கார்களுக்கான சாவிகளை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் அவர்களுக்கு வழங்கினார். டெண்டுல்கர்தான், ஒலிம்பிக்கிற்கான இந்தியாவின் நல்லெண்ண தூதர் என்பதால் அவர் கையால் கார் கொடுக்கப்பட்டது.

தந்தைக்கு பரிசு

தந்தைக்கு பரிசு

இந்நிலையில் சாஷி மாலிக் தான் பிஎம்டபிள்யூ காரை பயன்படுத்தப்போவதில்லை எனவும், தன் கனவுக்கு பெரிதும் உதவியாக இருந்த தந்தைக்கு இந்த காரை பரிசளிக்கப்போவதாவும், தன்னுடைய பழைய 'போலோ' காரே தனக்கு போதும் என தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, September 3, 2016, 15:41 [IST]
Other articles published on Sep 3, 2016
English summary
Sachin Tendulkar, India's goodwill ambassador at the Olympics, presented Sakshi Malik with a brand new BMW car. However she said she's happy driving her blue VW Polo gifted by her father and instead will gift him the luxury car. "He has sacrificed a lot for me," she said.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X