For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2020 ஒலிம்பிக்கில் தங்கம்... அப்புறம்தான் சாக்ஷிக்கு கல்யாணம்- சொல்வது அம்மா

By Mayura Akilan

டெல்லி: சாக்ஷிக்கு விரைவில் திருமணம் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என அவரது தாயார் கூறியுள்ளார். சாக்ஷியின் ஓரே இலக்கு 2020 நடக்க இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெலவதே என்றும் கூறியுள்ளார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஹரியானாவை சேர்ந்த சாக்ஷி மாலிக் மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். அவரது சாதனையைப் பாராட்டி, கேல் ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. தற்போது, சாதனை நாயகியாக வலம்வரும் இந்த ஹரியானா மங்கை, விரைவில் தனது மனம் கவர்ந்த நாயகனை கரம்பிடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த செய்தியை, சாக்ஷி மாலிக்கின் சகோதரர் சச்சின், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். பிரபல மல்யுத்த வீரர் சத்யவார்ட் காடியன் என்பவரை சாக்ஷி மாலிக் திருமணம் செய்ய உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

வெள்ளி நாயகன் சத்யவார்ட் காடியன்

வெள்ளி நாயகன் சத்யவார்ட் காடியன்

கடந்த 2014ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் மல்யுத்த வீரரான சத்யவார்ட் காடியன் வெள்ளிப் பதக்கம் வென்றவர். இவர்தான் சாக்ஷி மாலிக் பதக்கம் வென்றவுடன் முதல் நபராக வாழ்த்து தெரிவித்திருந்தார்.

மல்யுத்த வீரருடன் காதல்

மல்யுத்த வீரருடன் காதல்

என்னைப் போன்ற ஒரு மல்யுத்த வீரரைக் காதலித்து வருகிறேன். அவருடைய பெயரைச் சொல்லமாட்டேன். ஆனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக நான் தயாராவதில் அவர் எனக்கு மிகவும் உதவிகரமாக உள்ளார் என்று சமீபத்தில் சாக்ஷி மாலிக் கூறியதாக செய்தி வெளியானது.

சாக்ஷி பேட்டி

சாக்ஷி பேட்டி

என்னுடைய கனவை அவருடைய கனவாகவும் எண்ணுகிறார். திருமணத்துக்குப் பிறகு ஒரு நல்ல நண்பராக இருப்பார். திருமணத்துக்குப் பிறகு மல்யுத்தத்தில் ஈடுபடுவது பிரச்னையாக இருக்காது என எண்ணுகிறேன். இந்த வருடம் திருமணம் செய்துகொள்வேன் என்று சாக்ஷி கூறியதாக செய்திகள் வெளியானது.

தங்கம்தான் இலக்கு

தங்கம்தான் இலக்கு

இதனிடையே சாக்ஷியின் திருமணம் குறித்து வெளியான செய்தியில் உண்மை இல்லை என அவரது தாயார் சுதேஷ் மாலிக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது தாய் கூறுகையில் , " திருமணம் குறித்து வெளியான செய்தியில் உண்மை இல்லை , யாரோ உண்மைக்கு புறம்பான தகவ்ல்களை பரப்புகின்றனர். சாக்ஷியின் ஓரே இலக்கு 2020 நடக்க இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெலவதே ஆகும்,என்று கூறியுள்ளார்.

Story first published: Wednesday, September 7, 2016, 10:34 [IST]
Other articles published on Sep 7, 2016
English summary
Sakshi Malik big dream of winning a gold medal at the Olympics 2020 says her mother. Sakshi Malik who became first Indian female wrestler to win a medal at Olympics, may soon get married to a fellow wrestler.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X