யாருப்பா அந்த “லவ்லி பாய்”? பிரபல கிரிக்கெட் வீரர் மகனை மணக்கும் சானியா மிர்சா தங்கை!

பிரபல கிரிக்கெட் வீரர் மகனை மணக்கும் சானியா மிர்சா தங்கை!- Anam to marry Azarhuddin's son Asad

ஹைதராபாத் : இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் தங்கை ஆனம் மிர்சா, பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் மகனை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில வாரங்களாக வெறும் ஊகமாக இருந்த இந்த செய்தியை, சானியா மிர்சா உறுதிப்படுத்தி இருக்கிறார்.

சானியா மிர்சா மணமகனை "லவ்லி பாய்" என்றும் கூறி தெறிக்க விட்டுள்ளார். யார் அந்த லவ்லி பாய்?

10.5 ஓவரில் 5 விக்கெட்... மணக்க மணக்க சாப்பிட்டு வந்து வேட்டையாடிய இந்திய வீரர்.. குபீர் ரகசியம்!

சானியா தங்கை

சானியா தங்கை

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் தங்கை ஆனம் மிர்சா பேஷன் ஸ்டைலிஸ்ட் ஆக இருக்கிறார். அவருக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக கடந்த ஒரு மாதமாக செய்திகள் வலம் வந்தன.

பரவிய கிசுகிசு

பரவிய கிசுகிசு

சானியா மிர்சா மற்றும் அவர் தங்கை ஆனம் மிர்சா பதிவிட்ட சமூக வலைதள பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் மூலம் இந்த கிசுகிசு பரவி வந்தது. முக்கியமாக சானியா மிர்சா ஒரு நபருடன் இருக்கும் பதிவு தான் இதை துவக்கி வைத்தது.

சானியா பதிவிட்ட புகைப்படம்

சானியா பதிவிட்ட புகைப்படம்

மார்ச் மாதம் சானியா மிர்சா ஒரு இளம் வாலிபருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, "குடும்பம்" (Family) என கருத்து கூறி இருந்தார். அந்த வாலிபர் யார் என்ற கேள்வி அப்போதே எழுந்தது.

முகமது அசாருதீன் மகன்

அந்த வாலிபர் கிரிக்கெட் வீரர் அசாருதீனின் மகன் ஆசாத் எனப்படும் முகமது ஆசாதுதின். அவரை ஏன் குடும்பம் என கூறுகிறார் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

சானியா மிர்சா உறுதி

சானியா மிர்சா உறுதி

சானியா மிர்சா டெல்லி டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தன் தங்கை, லவ்லி பாய் ஒருவரை மணக்க உள்ளார். அவர் பெயர் ஆசாத். அவர் முகமது அசாருதீனின் மகன். திருமணத்தை நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து இருக்கிறோம் என் கூறி உள்ளார்.

டிசம்பரில் திருமணம்

டிசம்பரில் திருமணம்

திருமணம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறலாம் என உறுதிப்படுத்தப் படாத தகவல் வெளியாகி உள்ளது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இப்போதே வாழ்த்துக்களை கூறத் துவங்கி உள்ளனர்.

பேச்சுலர் பார்ட்டி

சானியாவின் தங்கை ஆனம் மிர்சா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பேச்சுலர் பார்ட்டி கொடுத்து இருக்கிறார். அது தொடர்பான புகைப்படங்களையும் அவர் இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

டேட்டிங் ஆரம்பிச்சாச்சு

டேட்டிங் ஆரம்பிச்சாச்சு

ஆனம் மிர்சா மற்றும் முகமது ஆசாதுதின், இருவரும் டேட்டிங் செல்வதாகவும் சில செய்திகள் வெளியாகி உள்ளது. திருமணம் குறித்த மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது.

திருமண திட்டம்

திருமண திட்டம்

இவர்கள் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும், பெரிய கூட்டம் இல்லாமல் அமைதியாகவே திருமணத்தை நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

கிரிக்கெட் சம்பந்தம்

கிரிக்கெட் சம்பந்தம்

சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கை மணந்துள்ள நிலையில், அவர் தங்கையும் கிரிக்கெட் வீரர் மகனை தான் மணக்க உள்ளார். ஆசாதுதின் உள்ளூர் போட்டிகளில் கிரிக்கெட் ஆடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Sania Mirza’s sister Anam Mirza going to marry Asad, son of former cricketer Mohammed Azharuddin.
Story first published: Monday, October 7, 2019, 16:37 [IST]
Other articles published on Oct 7, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X