For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முன்னணி வீரர்களை தோற்கடித்த தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்தியன்.. உலகக்கோப்பையில் கலக்கல்!

செங்குடு : சீனாவில் நடைபெற்று வரும் டேபிள் டென்னிஸ் ஆடவர் உலக கோப்பை தொடரில் பங்கேற்று ஆடிய தமிழக வீரர் ஜி சத்தியன் தன்னை எதிர்த்து ஆடிய தரவரிசை பட்டியலில் முன்னணியில் உள்ள வீரர்களை வீழ்த்தி 16வது சுற்று போட்டிகளுக்கு முன்னேறியுள்ளார்.

சர்வதேச அளவில் தரவரிசை பட்டியலில் 30வது இடத்தில் உள்ள சத்தியன், தன்னைவிட 8 புள்ளிகள் முன்னணியில் உள்ள பிரான்சை சேர்ந்த சைமன் காவ்சி மற்றும் 24வது இடத்தில் உள்ள டென்மார்க்கை சேர்ந்த குரோத் ஜோனாதன் ஆகியோரை வீழ்த்தியுள்ளார்.

Sathiyan Enters last -16 in ITTF World Cup

இவர்களை வீழ்த்தியதன்மூலம் சீனாவில் நாளை நடைபெறவுள்ள 16வது சுற்று போட்டிகளில் விளையாட சத்தியன் தேர்வாகி உள்ளார்.

சர்வதேச அளவில் பல வெற்றிகளை குவித்து வருகிறார் தமிழகத்தின் டேபிள் டென்னிஸ் வீரர் சத்தியன். இவர் சர்வதேச அளவில் ஆடவர் தரவரிசையில் 30வது இடத்தில் உள்ளார்.

சீனாவில் நடைபெற்றுவரும் சர்வதேச டேபிள் டென்னிஸ் பெடரேஷனின் ஆடவர் உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடிவரும் சத்தியன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட தரவரிசையில் தன்னைவிட எட்டு புள்ளிகள் முன்னணியில் உள்ள பிரான்சை சேர்ந்த சைமன் காவ்சி மற்றும் 24வது இடத்தில் உள்ள டென்மார்க்கை சேர்ந்த குரோத் ஜோனாதன் ஆகியோரை 4க்கு 3 மற்றும் 4க்கு 2 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி 16வது சுற்று போட்டிகளுக்கு முன்னேறியுள்ளார். இந்த 16 சுற்றுகள் போட்டி சீனாவில் நாளை நடைபெறவுள்ளது.

Story first published: Friday, November 29, 2019, 19:53 [IST]
Other articles published on Nov 29, 2019
English summary
Indian Table Tennis star Sathiyan Enters last -16 in ITTF World cup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X