For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அப்படிப்போடு.. ஒரு மெடல் பார்சல்..? 10m Air Pistol இறுதிப் போட்டியில் நுழைந்த இந்தியா

டோக்கியோ: ஆண்கள் 10m Air பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில், இந்தியாவின் சவுரப் சவுத்ரி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நேற்று (ஜுலை.23) தொடங்கியது. கொரோனா காரணமாக ரசிகர்கள் இன்றி வெறிச்சோடிய நிலையில் போட்டிகள் தொங்கின.

இதில், இன்று தான் பதக்கங்களுக்காக போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. காலை முதல் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர்.

ஒரே இடத்தில் 15 நாட்டு தலைவர்கள்.. சிறப்பு பெற்ற டோக்கியோ ஒலிம்பிக்..இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்ஒரே இடத்தில் 15 நாட்டு தலைவர்கள்.. சிறப்பு பெற்ற டோக்கியோ ஒலிம்பிக்..இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

 ஹாக்கியில் அபாரம்

ஹாக்கியில் அபாரம்

இன்று காலை நடந்த பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில், இந்தியாவின் இளவேனில் வாலறிவன் மற்றும் அபூர்வி சண்டேலா ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேற தவறினார்கள். இதைத் தொடர்ந்து, நடந்த வில்வித்தை போட்டி கலப்பு அணிகள் பிரிவு வெளியேற்றுதல் சுற்றில், இந்தியாவின் பிரவீன் ஜாதவ் - தீபிகா குமாரி இணை காலிறுதிக்கு முன்னேறியது. இதில், 5-3 என்ற கணக்கில் சீன-தைபே அணியை வென்று இந்தியா காலிறுதிக்கு முன்னேறியது. இதையடுத்து, இந்தியா - நியூசிலாந்து ஆண்கள் ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில், 3-2 என்று கோல் கணக்கில் இந்தியா அபாரமாக வெற்றிப் பெற்றது.

 டேபிள் டென்னிஸில் ஏமாற்றம்

டேபிள் டென்னிஸில் ஏமாற்றம்

அதேசமயம், இன்று நடைபெற்ற ஜுடோ போட்டியில் இந்தியாவின் சார்பில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில், சுஷிலா தேவி - ஹங்கேரியின் எவா செர்னோ விக்கி ஆகியோர் மோதினர். இந்தியா சார்பில் ஜுடோ விளையாட்டில் கலந்து கொண்ட ஒரே போட்டியாளர் சுஷிலா மட்டும் தான். ஆனால், எவாவிடம் அவர் தோற்று வெளியேறினார். இதைத் தொடர்ந்து, டேபிள் டென்னிஸ் விளையாட்டில், கலப்பு இரட்டையர் பிரிவில் மனிகா பத்ரா- சரத்கமல் ஆகியோர் பங்கேற்றனர். சீன தைபேயின் லின் யன் ஜூ-செங்கு ஜிங்குவுடன் இவர்கள் மோதினர். இதில், 8-11, 6-11, 5-11, 4-11 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்து வெளியேறியது இந்திய இணை.

 575 புள்ளிகள்

575 புள்ளிகள்

இந்த நிலையில், Men's 10m Air Pistol தகுதிச் சுற்றுப் போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில், உலகின் நம்பர்.1 வீரரான அபிஷேக் வெர்மா மற்றும் உலகின் நம்பர்.2 வீரரான சவுரப் சவுத்ரி ஆகியோர் பங்கேற்றனர். இதில், அபிஷேக் மொத்தமாகவே 575 புள்ளிகள் மற்றும் பெற்றதால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

 முதல் மெடல்?

முதல் மெடல்?

ஆனால், இரண்டாம் நிலை வீரரான சவுரப் சவுத்ரி சிறப்பான ஷாட்களை வெளிப்படுத்தினார். இதனால் மொத்தமாக 586 புள்ளிகளை எடுத்து சவுரப் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இன்று பகல் 12 மணிக்கு இறுதிப் போட்டி நடைபெறுகிறது. ஸோ, சவுரப் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணி முதல் மெடலை கைப்பற்ற பிரகாசமான வாய்ப்பு உருவாகியுள்ளது.

Story first published: Saturday, July 24, 2021, 14:18 [IST]
Other articles published on Jul 24, 2021
English summary
Saurabh Chaudhary qualifies 10m Air Pistol final - சவுரப்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X