For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சூப்பர் டீச்சர்.. செம ஹஸ்பென்ட்.. அருமையான கிரிக்கெட்.. லாக்டவுனை இப்படியும் விரட்டலாமே

பாலக்காடு: தமிழக மக்களைப் போலவே கேரளத்தினரும் லாக்டவுன் கொடுமையை விதம் விதமாக போக்கிக் கொண்டுள்ளனர்.

Recommended Video

அருமையான கிரிக்கெட்.. கேரள டீச்சர் குடும்பத்தின் கலகல டைம் - வீடியோ

கொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் லாக்டவுன் அமலில் உள்ளது. எல்லோருமே வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கிறோம். பல ஊர்களில் சுத்தமாக முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.

லாக்டவுனால் வீடுகளில் முடங்கியுள்ள மக்கள் என்னென்னவோ செய்து பொழுதைக் கழித்து வருகினறனர். வீட்டு வேலைகள் செய்வது, வீட்டினருடன் அமர்ந்து பேசுவது என்று அவர்களுக்கு பொழுது போகிறது.

அடுத்த வருஷமும் ஒலிம்பிக்கை நடத்த முடியலன்னா... ரத்துதான் செய்யனும் அடுத்த வருஷமும் ஒலிம்பிக்கை நடத்த முடியலன்னா... ரத்துதான் செய்யனும்

குடும்ப விளையாட்டு

குடும்ப விளையாட்டு

அதேபோல குடும்பத்தினரோடு சின்னச் சின்ன விளையாட்டுக்களிலும் பலர் ஈடுபடுகின்றனர். தாயம் உருட்டும் சத்தம் எல்லா வீடுகளிலும் கேட்கிறது. அதேபோல ஒளிந்து விளையாடுவது, கேரம், செஸ் என களை கட்டியுள்ளன வீடுகள். இந்த நேரத்தில்தான் நமது கண்ணில் இந்த வீடியோ பட்டது. இது கேரளத்து வீடு. இவர்கள் ஆடும் விளையாட்டு பார்க்கவே சூப்பராக இருக்கிறது.

டீச்சர் குடும்பத்தின் கிரிக்கெட்

டீச்சர் குடும்பத்தின் கிரிக்கெட்

இந்த குடும்பத்தினர் தங்களது வீட்டு வளாகத்தில் அழகாக கிரிக்கெட் ஆடுகின்றனர். இதில் இடம் பெற்றிருப்பவர்கள் பள்ளிக்கூட ஆசிரியை பிந்து ஒழுக்கில். இவரும் அவரது கணவர் ராமன் நம்பூதிரியும், பின்னே அவர்களது மகன்களும் இணைந்து கிரிக்கெட் ஆடியுள்ளனர். அம்மா முதலில் பவுல் செய்கிறார். அப்பா பேட் செய்கிறார். இதை மகன்கள் படம் பிடித்து ஜாலியாக கிண்டலும் அடிக்கின்றனர்.

அம்மாவும் அப்பாவும் பின்னே மகன்களும்

அம்மாவும் அப்பாவும் பின்னே மகன்களும்

அதேபோல பிறகு அப்பா பவுலிங் செய்கிறார். அம்மா பேட் செய்கிறார். பந்தை அவர் கோட்டை விட அது ஸ்ட்ம்பாக கருதப்படும் மரத்தின் மீது போய் மோதி விழுகிறது. அம்மா அவுட்டாகிறார். இருவரும் தேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் போல ஜாலியாக விளையாடுகின்றனர். அதை மகன்கள் ரசித்து வீடியோ எடுத்துள்ளனர்.

அருமையான உதாரணம்

அருமையான உதாரணம்

உண்மையில் இதுபோன்று குடும்பத்தோடு விளையாடும் போது நிச்சயம் புத்துணர்ச்சி கிடைக்கும். இதன் மூலம் கொரோனா தனிமை என்பது அறவே இல்லாமல் ஒழிக்கப்படும். வந்துள்ள சவாலை சமாளிக்கும் மனத்திடம் இதுபோன்ற குடும்ப விளையாட்டுக்கள் மூலம் கிடைக்கும். கொரோனா என்ற கொடிய அரக்கனை விரட்ட குடும்பத்தோடு ஜாலியாக இருந்து அதை செய்ய வேண்டும். அதற்கு இந்தக் குடும்பம் ஒரு அருமையான உதாரணம்.

Story first published: Tuesday, April 28, 2020, 15:22 [IST]
Other articles published on Apr 28, 2020
English summary
A Kerala school teacher played cricket with her husband and sons during lock down.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X