For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக்கில் கலந்துக்கொள்ள மாட்டேன்.. அதிரடியாக அறிவித்த செரீனா வில்லியம்ஸ்.. காரணம் என்ன?

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டியில் இருந்து முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் விலகியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 23ம் தேதி முதல் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெறுகிறது.

இன்று ஐபிஎல் அட்டவணை வெளியீடு? ஐசிசி விதித்த கெடு முடிந்தது.. முக்கிய ஆலோசனையில் பிசிசிஐ! இன்று ஐபிஎல் அட்டவணை வெளியீடு? ஐசிசி விதித்த கெடு முடிந்தது.. முக்கிய ஆலோசனையில் பிசிசிஐ!

கொரோனா காரணமாக கடந்தாண்டு ஒத்திவைக்கப்பட்ட இந்த ஒலிம்பிக் போட்டிகள் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தற்போது நடைபெறவுள்ளது.

செரீனா விலகல்

செரீனா விலகல்

ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து டென்னிஸ் பிரபலங்களான ரஃபேல் நடால் உடல்நிலையை காரணம் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர் டாமினிக் தீமும் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்று கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் வருத்ததில் உள்ள நிலையில் தற்போது நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் விலகியுள்ளார்.

காரணம்

காரணம்

தனது விலகல் குறித்து பேசியுள்ள செரீனா, நான் ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்கொள்ளாததற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. ஒலிம்பிக்கில் பங்குபெறுவதற்கு எனக்கு தோன்றவில்லை. எனக்கு இதற்கு முன்னர் ஒலிம்பிக் போட்டிகள் சிறப்பாக அமைந்துள்ளது. எனினும் தற்போது அதுகுறித்து நான் சிந்திக்கவில்லை எனத்தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் நாயகி

ஒலிம்பிக் நாயகி

39 வயதாகும் அமெரிக்காவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், ஏற்கனவே கடந்த 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவராவார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற செரீனா, இன்னும் ஒரு பட்டம் வென்றால் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வரலாற்றில் அதிக பட்டம் வென்றவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் மார்கரெட் சாதனையை சமன் செய்து விடுவார்.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

டென்னிஸ் போட்டியில் உலகின் தலைசிறந்த வீரர்களாக பார்க்கப்படும் வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக விலகி வருவதால் டென்னிஸ் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளது. இவர்கள் மட்டுமல்லாது, நட்சத்திர வீரர்களான ரோஜர் ஃபெடரர் மற்றும் நோவாக் ஜோகோவிச் ஆகியோர் இன்னும் ஒலிம்பிக்கில் பங்குபெறுவது குறித்து எதனையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, June 29, 2021, 16:06 [IST]
Other articles published on Jun 29, 2021
English summary
Serena Williams confirms she will not play at the Tokyo Olympics 2020
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X