For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாளைக்கு என் பொண்ணு கேட்டா என்ன பதில் சொல்வேன்? அதனால்.. அதிர வைத்த செரீனா வில்லியம்ஸ் கணவர்!

நியூயார்க் : ரெடிட் சமூக வலைதளத்தின் இணை நிறுவனரான அலெக்சிஸ் ஓஹானியன் அந்த நிறுவனத்தின் போர்டில் இருந்து பதவி விலகி உள்ளார்.

Recommended Video

List of Fastest runners in International cricket

அவர் தன் பதவியை கருப்பினத்தை சேர்ந்த ஒருவருக்கு அளிக்குமாறு கூறி உள்ளார்.

அலெக்சிஸ் ஓஹானியன் தான் செரீனா வில்லியம்ஸின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

எனக்கு ஹூக்கா அடிக்கிற பழக்கமெல்லாம் இல்லை.. தோனியை குத்திக் காட்டி விளாசிய முன்னாள் வீரர்.. ஷாக்!எனக்கு ஹூக்கா அடிக்கிற பழக்கமெல்லாம் இல்லை.. தோனியை குத்திக் காட்டி விளாசிய முன்னாள் வீரர்.. ஷாக்!

ஜார்ஜ் பிளாயிட் படுகொலை

ஜார்ஜ் பிளாயிட் படுகொலை

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாயிட் படுகொலையை கண்டித்து கருப்பினத்தவருக்கு நீதி வேண்டும் என போராட்டம் வெடித்துள்ளது. இந்த போராட்டத்தில் பல பிரபலங்களும் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக இதுதான் பெரிய விஷயமாக உள்ளது.

ரெடிட் சமூக வலைதளம்

ரெடிட் சமூக வலைதளம்

இந்த நிலையில் ரெடிட் சமூக வலைதளம் இந்த இன சுதந்திர போராட்டங்களுக்கு குரலாக இருக்கும் என அதன் தலைமை நிர்வாகி ஸ்டீவ் ஹப்மன் கூறி இருந்தார். இந்த நிலையில், ரெடிட் சமூக வலைதளத்தின் நிறுவனர்களில் ஒருவரான அலெக்சிஸ் ஓஹானியன் அதிரடியாக போர்டில் இருந்து விலகி இருக்கிறார்.

கருப்பினத்தை சேர்ந்தவருக்கு பதவி

கருப்பினத்தை சேர்ந்தவருக்கு பதவி

அலெக்சிஸ் ஓஹானியன் பதவி விலகியது மட்டுமில்லாமல் தன் பதவியை ஒரு கருப்பினத்தை சேர்ந்தவருக்கு வழங்குமாறு கூறி உள்ளார். அவரது இந்த முடிவு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது பற்றியும் அவர் கூறினார்.

மகளின் எதிர்காலம்

மகளின் எதிர்காலம்

ஓஹானியன் - செரீனா வில்லியம்ஸ் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. செரீனா வில்லியம்ஸ் கருப்பினத்தை சேர்ந்தவர். அவரது கருப்பின மகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டே அவர் இதை செய்துள்ளார்.

பதில் சொல்ல வேண்டும்

பதில் சொல்ல வேண்டும்

ஓஹானியன் இது பற்றி கூறுகையில், ஒரு தந்தையாக என் கருப்பின மகள், நாளை நீ என்ன செய்தாய்? எனக் கேட்டால் பதில் சொல்ல வேண்டும் என்பதை சிந்தித்து தான் இந்த முடிவுகளை எடுத்துள்ளதாக அவர் கூறி உள்ளார். நிதி உதவியும் அளித்துள்ளார் ஓஹானியன்.

நிதி உதவி

நிதி உதவி

அலெக்சிஸ் ஓஹானியன் 1 மில்லியன் டாலர்களை கருப்பினதவர்களின் உரிமைக்காக போராடி வரும் ரக்பி வீரர் கோலின் காப்பர்நிக்கின் குழுவுக்கு அளிக்க உள்ளதாகவும் கூறி உள்ளார். இவரது உதவி மற்றும் செயல்பாடுகள் அமெரிக்காவில் வரவேற்பை பெற்றுள்ளது.

Story first published: Saturday, June 6, 2020, 14:30 [IST]
Other articles published on Jun 6, 2020
English summary
Serena Williams Husband Alexis Ohanian quits board and seeks black member for the post.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X