எல்லாத்தவிட கடினமான விஷயம்... மகனை சுமக்கும் ஷிகர் தவான்

டெல்லி : அனைத்தையும் காட்டிலும் தனக்கு மிகவும் கடினமான விஷயம் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் இந்திய துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய மகன் சரோவரை தினமும் படுக்கையில் இருந்து எழுப்புவதே தனக்கு மிகவும் கடினமான காரியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

யூஏஇயில் நடத்தப்படவுள்ள ஐபிஎல் 2020 போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் சார்பில் ஷிகர் தவான் பங்கேற்கவுள்ளார்.

ஐபிஎல் 2020 தொடர்... வீரர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தறது சந்தேகம்தான்... பிசிசிஐ தகவல்

டெல்லி கேபிடல்சில் விளையாடும் தவான்

டெல்லி கேபிடல்சில் விளையாடும் தவான்

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரிலிருந்து இந்திய அணியில் இடம்பெறாமல் உள்ளார். ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிவந்த ஷிகர், 2018 சீசனுக்கு பிறகு டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு 19 போட்டிகளில் விளையாடி 521 ரன்களை குவித்துள்ளார் ஷிகர் தவான்.

யூஏஇயில் நடைபெறுகிறது

யூஏஇயில் நடைபெறுகிறது

ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19 முதல் யூஏஇயில் நடைபெறவுள்ளது. இன்னும் இதுகுறித்து தேதிகளை முழுமையாக பிசிசிஐ அறிவிக்கவில்லை. ஆயினும் வீரர்கள் தங்களை ஐபிஎல் போட்டிகளுக்காக மனதளவில் தயார் படுத்தி வருகின்றனர். இதுவரை 159 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ஷிகர் தவான், 4,579 ரன்களை குவித்துள்ளார்.

வீட்டில் பொழுதுபோக்கு

வீட்டில் பொழுதுபோக்கு

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதங்களாக வீட்டில் முடங்கியுள்ள ஷிகர் தவான், தன்னுடைய குடும்பத்தினருடன் குறிப்பாக மகன் சரோவருடன் அதிகளவில் பொழுதை போக்கி வருகிறார். இருவரும் இணைந்த பல்வேறு புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். கடந்த வாரத்தில் இவர்கள் இருவரும் இணைந்து மூக்கில் ரிங்கை போட்டுக் கொண்டு புகைப்படம் வெளியிட்டிருந்தனர்.

ஷிகர் தவான் புகைப்படம்

ஷிகர் தவான் புகைப்படம்

இந்நிலையில் தற்போது தன்னுடைய மகனை படுக்கையில் இருந்து எழுப்பும்படியான புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ஷிகர் தவான். தினமும் சரோவரை படுக்கையில் இருந்து எழுப்புவது கடினமான காரியம் என்றும் தன்னுடைய பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Shikhar Dhawan shared a picture with Zoraver on his social media handles
Story first published: Thursday, July 30, 2020, 16:32 [IST]
Other articles published on Jul 30, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X