For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பயமின்றி.. திரும்பி வந்து.. மெடல் வென்ற சிமோன் பைல்ஸ்.. கைத்தட்டிய ஒட்டுமொத்த அமெரிக்கா

ஜப்பான்: மனநலப் பிரச்னைக்கு பிறகு மீண்டு வருவதே பெரிய விஷயம். இதில், வந்த வேகத்தில் மெடல் வேறு அடித்து அமர்க்களப்படுத்தி இருக்கிறார் சிமோன் பைல்ஸ்.

அமெரிக்காவை சேர்ந்த ஜிம்னாஸ்ட்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ். 6 ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற உலகின் தலைசிறந்த வீராங்கனையான இவர், டோக்கியோ ஒலிம்பிக்கில் 5 தங்கப்பதக்கங்களை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

அடுத்தடுத்த சரிவு.. குழப்பத்தில் இந்திய அணி.. டெஸ்ட் தொடர் வெற்றி வாய்ப்பு உள்ளதா.. கவாஸ்கர் கணிப்புஅடுத்தடுத்த சரிவு.. குழப்பத்தில் இந்திய அணி.. டெஸ்ட் தொடர் வெற்றி வாய்ப்பு உள்ளதா.. கவாஸ்கர் கணிப்பு

இதன் மூலம் ஒலிம்பிக்கில் அதிக தங்கப்பதக்கம் வென்ற பெருமை அவரைச் சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் மனநல பிரச்னையால் பாதிக்கப்பட்டார். அதீத மன அழுத்தம் என்றும் கூறலாம்.

துணை நிற்கும் அமெரிக்கா

துணை நிற்கும் அமெரிக்கா

இந்த நிலையில் தான், அவர் டோக்கியோ ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டிகளில் இருந்து திடீரென வெளியேறுவதாக அறிவித்தார். இது ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. தனக்கு அதிக மன அழுத்தம் இருப்பதாகவும், எனவே மன ஆரோக்கியத்திற்காக மருத்துவப் பரிசோதனை செய்யவிருப்பதாகவும் கூறி அவர் வெளியேறினார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க ஜிம்லாஸ்டிக் அமைப்பு வெளியிட்டது. மேலும், அவரின் பின்னால் அமெரிக்கா நிச்சயம் துணை நிற்கும் என ஆறுதல் கூறியது.

சிமோன் பைல்ஸ்

சிமோன் பைல்ஸ்

அதேசமயம், தான் தீராத மன அழுத்தத்தில் இருப்பதாக அறிவித்து அதிர வைத்தார் இங்கிலாந்தின் நட்சத்திரம் நீச்சல் வீரர் ஆடம் பீட்டி. இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் 100 மீ ப்ரெஸ்ட்ரோக் பிரிவிலும், 4x100 மீ கலப்பு மெட்லே ரிலேவிலும் தங்கம் வென்றவர். அதுமட்டுமின்றி, ஆண்கள் 4x100 மீ மெட்லியில் வெள்ளி வென்று அசத்தியவர். இப்படி தங்கப்பதக்கங்களை அள்ளிய ஆடம், திடீரென தான் கடுமையான மன உளைச்சலில் இருப்பதாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஒலிம்பிக் தொடரில் இருந்து இவ்வாறு மன அழுத்தம் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கும் 2வது வீரர் இவர். அதுமட்டுமின்றி, கடந்த மூன்று மாதங்களில் சர்வதேச அளவில் மன அழுத்தம் குறித்து பேசியிருக்கும் நான்காவது விளையாட்டு வீரரும் இவர் தான். சிமோன் பைல்ஸ், ஜப்பானின் நவோமி ஒசாகா, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரைத் தொடர்ந்து இவ்வாறு அறிவித்தவர் ஆடம் பீட்டி தான்.

தங்கம் மிஸ்ஸிங்

தங்கம் மிஸ்ஸிங்

ஓய்வில்லாத உழைப்பு, வெற்றிப்பெற வேண்டிய கட்டாயம், தன் மீதுள்ள அதிகபட்ச எதிர்பார்ப்பு என அனைத்தும் வீரர், வீராங்கனைகளை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது என்கின்றனர் மனநல நிபுணர்கள். இந்த நிலையில், இந்த ஒலிம்பிக்கில் மீண்டும் பங்கேற்கமாட்டார் என்று பேசப்பட்ட சிமோன் பைல்ஸ், இன்று பெண்களுக்கான balance beam இறுதிப் போட்டியில் பங்கேற்றார். ஒலிம்பிக்கில் பங்கேற்கப்போவதில்லை என்று செய்திக்கு மத்தியில் சிமோன் மீண்டும் களமிறங்கியது அமெரிக்க ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதற்கு ஏற்றார் போல், சிமோன் சிறப்பாகவே செயல்பட்டார். ஆனால், அவரால் தங்கம் வெல்ல முடியவில்லை.

வெண்கலம்

வெண்கலம்

ஒலிம்பிக்கில் சீனாவின் குவான் செஞ்சன் பெண்களுக்கான balance beam போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார், அதே நேரத்தில் அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ் வெண்கலம் வென்றார். சீனாவின் டாங் ஜிஜிங் வெள்ளி வென்றார். மனநல பிரச்சனையில் சிக்கி பாடுபட்ட சிமோன் மீண்டும் ஒலிம்பிக்கில் களமிறங்கிய போதே அவர் மீதான கிராஃப் அதிகரித்தது. இதில் அவர் வெண்கலப்பதக்கமும் வெல்ல அவர் மீதான மரியாதை ஏகத்துக்கும் அமெரிக்கர்களிடையே கூடியுள்ளது. பைல்ஸ் இப்போது இரண்டு ஒலிம்பிக்கிலும் சேர்த்து ஏழு ஒலிம்பிக் பதக்கங்களை வென்றிருக்கிறார். இதில், நான்கு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம் அடங்கும்.

வாழ்த்துகள் சிமோன்!

Story first published: Tuesday, August 3, 2021, 19:14 [IST]
Other articles published on Aug 3, 2021
English summary
Simone Biles bronze in women's balance beam - சிமோன் பைல்ஸ்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X