For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

100க்கு மேற்பட்ட வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை.. துணைச்சென்ற காவல்துறை.. சீமோன் பைல்ஸால் பரபரப்பு!

அமெரிக்கா: டோக்கியோ ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டிகளில் இருந்து விலகிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சீமோன் பைல்ஸ், தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை கண்கலங்க தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் அணி இறுதிப் போட்டியில் இருந்து அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை பைல்ஸ் வெளியேறினார்.

ஐபில்: கோலியின் ரெக்கார்டையே முறியடிக்கும் வீரர்.. நிச்சயம் 2 - 3 சதங்களை அடிப்பார்.. கம்பீர் உறுதி ஐபில்: கோலியின் ரெக்கார்டையே முறியடிக்கும் வீரர்.. நிச்சயம் 2 - 3 சதங்களை அடிப்பார்.. கம்பீர் உறுதி

தனது மன ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதாக்கூறி 24 வயதான பைல்ஸ் ஒலிம்பிக்கில் இருந்து விலகினார்.

என்றும் சாம்பியன்

என்றும் சாம்பியன்

ஒலிம்பிக் மற்றும் உலகக் கோப்பை போட்டிகளில் 30 முறை சாம்பியனாக இருந்துள்ள சீமோன் பைல்ஸ் ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கம் வென்ற விளையாட்டு வீரராக (ஆண் அல்லது பெண்) ஆவதற்கு டோக்கியோவில் நான்கு பதக்கங்களை வெல்ல வேண்டியிருந்தது. ஆனால் அதிலிருந்து வெளியேறினார்.

தற்போது வரை அவரே தலைசிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக பார்க்கப்படுகிறார்.

மன அழுத்தத்திற்கான காரணம்

மன அழுத்தத்திற்கான காரணம்

இந்நிலையில் சீமோன் பைல்ஸுன் மன அழுத்ததிற்கு பின்னால் மறைந்திருந்த உண்மை வெளியாகியுள்ளது. அமெரிக்க நீதிமன்றத்தில் அவர் பரபரப்பு வாக்கு மூலம் ஒன்றை அளித்துள்ளார். அதாவது அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் மருத்துவராக செயல்பட்டு வந்த லேரி நாசர் என்பவர், பைல்ஸ் உட்பட பல்வேறு வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்களை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதனை அமெரிக்க காவல் துறையும், ஒலிம்பிக் கமிட்டியும் மூடி மறைத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மூடிமறைத்த காவல்துறை

மூடிமறைத்த காவல்துறை

அமெரிக்க நீதிமன்றத்தில் இதுகுறித்து பேசிய சீமோன் பைல்ஸ், மருத்துவர் நாசர், என்னைப்போன்ற 100க்கும் மேற்பட்ட வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார். இதுகுறித்து புகார்கள் அளிக்கப்பட்ட போதும், அமெரிக்க காவல் துறையான (எஃப்பிஐ) மற்றும் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் சமேளனமும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆதாரங்களை மூடி மறைத்தனர். இந்த சம்பவத்தில் கிடைத்த ஆதாரங்களை மாற்றி அமைத்ததற்காக காவலர் ஒருவர் கடந்த 2015ம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டதே நான் கூறுவதற்கு சான்று.

கண்கலங்கிய சாம்பியன்

கண்கலங்கிய சாம்பியன்

நீதிமன்றத்தில் பேசிக்கொண்டிருந்த சீமோன் பைல்ஸ் திடீரென கண்கலங்கினார். அப்போது அவர், பாலியல் குற்றச்சாட்டிற்காக இந்த இடத்தில் நான் அமர்ந்திருக்கிறேன். இதனை விட கொடுமையான இடத்தை உலகத்தில் எங்கும் நான் உணரமாட்டேன் என மனம் கலங்கி தெரிவித்தார். இதனை கேட்ட நீதிபதி, தானும் என் வாழ்நாளில் சந்தித்த மிக மோசமான வழக்கு இதுதான் என்று மன வருத்தத்தை கூறினார். மேலும் இந்த விவகாரத்தில் உண்மைகளை மூடி மறைத்த காவல்துறை, ஒலிம்பிக் கமிட்டி உட்பட அனைத்து விசாரணைகளையும் விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

Story first published: Thursday, September 16, 2021, 12:07 [IST]
Other articles published on Sep 16, 2021
English summary
Simone Biles Strong allegation against US Olympic Committee, FBI for sex-abuse crisis
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X