For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதல்ல மாடி மதில் சுவரில்.. அப்புறம் தென்னை மரத்தில்.. அலறி அடித்துக் கொண்டு ஓடிய கங்குலி!

கொல்கத்தா : முன்னாள் இந்திய அணி கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவரும் ஆன கங்குலி தான் கண்ட விசித்திர சம்பவத்தை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

Recommended Video

Ganguly reveals toss issue 2001 test with Steve Waugh

கங்குலி களத்தில் ஆக்ரோஷமாக ஆடுபவர். அவரது கேப்டன்சியில் எதிரணிகளை பல சந்தர்ப்பங்களில் திணற வைத்துள்ளார்.

ஆனால், அவரும் ஒரு முறை சிறு வயதில் பயந்து அலறி அடித்து ஓடி இருக்கிறார். அதுவும் பேயைக் கண்டு.

 நியூசிலாந்து மகளிர் அணி கேப்டனாக சோபி டிவைன் தேர்வு... மிகச்சிறந்த மரியாதை என மகிழ்ச்சி நியூசிலாந்து மகளிர் அணி கேப்டனாக சோபி டிவைன் தேர்வு... மிகச்சிறந்த மரியாதை என மகிழ்ச்சி

கீழே போன கங்குலி

கீழே போன கங்குலி

கங்குலி தன் 12 அல்லது 13 வயதில் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த நபர் மூலமாக பேயைக் கண்டுள்ளார். ஒரு ஞாயிறு மாலை வீட்டின் மாடியில் குடும்பத்தினருடன் அமர்ந்து இருந்தார் கங்குலி. அப்போது அந்த நபரிடம் தேநீர் எடுத்து வருமாறு சொல்ல கங்குலி கீழே அனுப்பப்பட்டார்.

காணவில்லை

காணவில்லை

ஆனால், அந்த நபரை வீட்டில் காணவில்லை. சமையல் அறையிலும் இல்லை. இதை வீட்டில் இருந்த பெரியவர்களிடம் கூறி உள்ளார். அவர்கள் மாடியில் போய் தேடுமாறு கூறி உள்ளனர். அங்கேயும் இல்லை. பின்னர் வெளியே இருந்த சிறு வீடுகளில் போய் தேடியும் கிடைக்கவில்லை.

மதில் சுவர் விளிம்பில்

மதில் சுவர் விளிம்பில்

அப்போது தான் மாடியின் மதில் சுவர் விளிம்பில் அந்த நபர் வேகமாக ஓடுவதை கவனித்தார் கங்குலி. அது ஆறு மாடி கட்டிடம். மேலே இருந்து விழுந்தால் உயிர் பறிபோகும். அதைக் கண்டு அலறி அடித்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடி இருக்கிறார் கங்குலி.

தென்னை மரத்தின் மேலே

தென்னை மரத்தின் மேலே

வீட்டில் இருந்த பெரியவர்களிடம் இதைக் கூற அவர்களும் மாடிக்கு விரைந்தனர். அங்கேயும் அவரை காணவில்லை. பின்னர் தேடிப் பார்த்ததில் ஒரு தென்னை மரத்தின் மேலே தென்னங்கீற்றின் மேல் அமர்ந்து இருக்கிறார் அந்த நபர்.

கயிற்றில் கட்டி..

கயிற்றில் கட்டி..

பின்னர் தீயணைப்புத் துறையை அழைத்து அந்த நபரை பிடிக்க முயன்றனர். அவர் தீயணைப்பு வீரர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காததை அடுத்து அவரை கயிற்றில் கட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இத்துடன் இந்த சம்பவம் முடியவில்லை.

மீண்டும் வந்தார்

மீண்டும் வந்தார்

அடுத்த நாள் மாலை 5 மணிக்கு அவர் மீண்டும் கங்குலி வீட்டுக்கு வந்துள்ளார். அவரைக் கண்டதும் அனைவரும் அலறி அடித்து ஓடி உள்ளனர். அவர் எல்லோரையும் அமைதிப்படுத்தி, தான் ஏன் முந்தைய தினம் அப்படி நடந்து கொண்டேன் என விவரித்துள்ளார்.

தன் தாய் வருவார்

தன் தாய் வருவார்

சில நாட்கள் தன் உடலில் இறந்து போன தன் தாய் வருவார் என்றும் அதனால் தான் அப்படி நடந்து கொண்டேன் எனவும் விளக்கி இருக்கிறார். அந்த நபர் மூலம் தான் பேயைக் கண்டதாக கங்குலி அந்த பேட்டியில் தெரிவித்தார்.

ஜாலி மேட்டர்

ஜாலி மேட்டர்

சீரியஸான இந்த விஷயத்தை பற்றி பேசிய கங்குலி தான் டயட் குறித்து ஒரு ஜாலி விஷயம் ஒன்றையும் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒன்பது மாதங்களாக தான் பிஸ்கட், சாதம், பிரட் உள்ளிட்ட எந்த எடை அதிகரிக்கும் உணவுகளையும் உண்பதில்லை என்றார்.

மெனு இது தான்

மெனு இது தான்

ஆனால், இது ஆறு நாட்களுக்கு மட்டும் தானாம். வாரத்தில் ஒருநாள் தன் மனம் போல சாப்பிடுவாராம், அதன் மூலம் மீதமுள்ள ஆறு நாட்களில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வாராம். அந்த ஒரு நாளில் அவரது மெனு - பிரியாணி, இனிப்புகள், சமோசா, ஜிலேபி மற்றும் பல!!

Story first published: Thursday, July 9, 2020, 15:00 [IST]
Other articles published on Jul 9, 2020
English summary
Sourav Ganguly seen Ghost in his house during younger days.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X