For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வென்ற 2 வெண்கலப்பதக்கங்கள் திருட்டு-ஒருவர் கைது

By
Gold Medals
லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வென்ற 2 வெண்கலப்பதக்கங்கள், இரவு விடுதி ஒன்றில் நடைபெற்ற பாராட்டு விழாவில் திருட்டு போனது. இதில் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இங்கிலாந்து வீரர்கள், வீராங்கனைகளுக்கான பாராட்டு விழா, பக்கிங்ஹாமில் உள்ள இரவு விடுதி ஒன்றில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இங்கிலாந்து ராணி எலிசபெத் செய்திருந்தார்.

இதில் துடுப்பு படகு வீரர் அலெக்ஸ் பார்டிரிட்ஜ், ஹாக்கி வீரர் ஹன்னா மெக்லியோடு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இருவரும் அணிந்து வந்திருந்த வெண்கலப்பதக்கங்களை, அவை வைக்கப்பட்டிருந்த ஜர்க்கின் உடன் மர்மநபர்களால் திருடப்பட்டது.

இது குறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் திருட்டு போன பார்டிரிட்ஜின் வெண்கலப்பதக்கம் மற்றும் அது வைக்கப்பட்டிருந்த ஜார்கின் ஆகியவற்றை 31 வயதான நபர் ஒருவர், வடமேற்கு லண்டன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்தனர்.

ஆனால் மற்றொரு பதக்கத்தை குறித்து இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து லண்டன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக ஆடி பதக்கம் வென்ற வீரர்களுக்கு, அதை காப்பாற்ற தெரியவில்லையே...

Story first published: Saturday, October 27, 2012, 15:10 [IST]
Other articles published on Oct 27, 2012
English summary
The medals belonging to hockey player Hannah Macleod and rower Alex Partridge, were taken with their TeamGB jackets as they partied after a reception hosted by the Queen at Buckingham Palace to celebrate the achievements of the London 2012 athletes. One of two Olympic bronze medals stolen from a London nightclub has been recovered, police have said.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X