For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிந்த்ராவுக்குக் கிடைக்குமா பாரதரத்னா..?

Abhinav Bindra's name recommended for Bharat Ratna
டெல்லி: ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவரான துப்பாக்கிச் சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று தேசிய துப்பாக்கிச் சுடும் கழகம் மத்திய அரசுக்குப் பரிந்துரை வழங்கியுள்ளது.

ஒலிம்பிக்கில் தனி நபர் பிரிவில் தங்கம் வென்ற ஒரே இந்தியர் பிந்த்ராதான் என்பது குறிப்பிடத்தக்கது.

2008ம் ஆண்டுஆகஸ்ட் 1ம் தேதி பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார் பிந்த்ரா.

பிந்த்ராவுக்கு பாரதரத்னா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து துப்பாக்கிச்சுடும் கழகத்தின் ஆலோசகரான பல்ஜீத் சிங் சேத்தி கூறுகையில், தனி நபர் பிரிவில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற அடிப்படையில் பிந்த்ராவின் பெயரைநாங்கள் விருதுக்குப் பரிந்துரைத்துள்ளோம் என்றார்.

கிடைக்குமா விருது?

ஏற்கனவே சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா தர வேண்டும் என்று பல காலமாக கோரப்பட்டு வருகிறது. ஆனால் சட்டப்படி விளையாட்டு வீரர்களுக்கு பாரதரத்னா வழங்க சட்டத்தில் இடமில்லை. இதனால் சச்சினுக்கு விருதைக் கொடுக்க முடியாத நிலை. இதையடுத்தே அவருக்கு எம்.பி. பதவியைக் கொடுத்தனர்.

இந்த நிலையில் தற்போது பிந்த்ராவுக்கும் பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Story first published: Tuesday, May 14, 2013, 8:23 [IST]
Other articles published on May 14, 2013
English summary
The only Indian to win an individual gold medal in Olympics, shooter Abhinav Bindra, has been recommended for the Bharat Ratna - the country's highest civilian honour - by the National Rifle Association of India (NRAI). On August 11, 2008, the 30-year-old reserved marksman from Zirakpur, Punjab scripted history when he shot an incredible 700.5 to clinch the yellow metal in the Beijing Olympic Games.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X