For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஆன்டி முர்ரே

By Mathi
 Andy Murray
நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நியூயார்க் நகரில் நடைபெற்றன.. இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் உலகின் இரண்டாம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், மூன்றாம் நிலை வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரேவுடன் மோதினார். முதல் செட்டானது டை பிரேக்கருக்குப் போனது. டைபிரேக்கர் முடிவில் முர்ரே முதல் செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டையும் முர்ரே கைப்பற்றினார். ஆனால் மூன்றாவது மற்றும் 4-வது செட்டை ஜோகோவிச் கைப்பற்ற ஆட்டம் பரபரப்படைந்தது.

கடைசி செட்டை யார் கைப்பற்றுவார்களோ? என்ற பரபரப்பில் இருவரும் சளைக்காமல் ஆடினர். விறுவிறுப்பான இறுதி செட்டின் முடிவில் 6.-2 என்ற புள்ளி கணக்கில் முர்ரே செட்டைக் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.

கிராண்ட்சிலாம் போட்டிகளில் முர்ரே நான்கு முறை இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தாலும் சாம்பியன் பட்டம் வெல்வது என்பது முதல் முறையாகும். அதுவும் 1936-ம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்து நாட்டவர் ஒருவர் அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வெல்வது முதல்முறையாகும்.

Story first published: Tuesday, September 11, 2012, 12:16 [IST]
Other articles published on Sep 11, 2012
English summary
Britain's long wait is over. The nation that invented modern tennis finally has a champion for the new age after Andy Murray won the US Open on Monday. The jokes about wooden rackets and men playing tennis in long, white trousers have lost their punchline and Fred Perry, the last British man to win a grand slam single title way back in 1936, can rest in peace.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X