For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய வீரரின் அறையில் பெண் தங்கியது உண்மை- இலங்கை கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர்

By Mayura Akilan

மும்பை: 2010ம் ஆண்டு நடந்த இந்தியா நியூசிலாந்து இலங்கை கிரிக்கெட் தொடரின்போது, இந்திய வீரர் ஒருவரின் அறையில் பெண் ஒருவர் தங்கியது உண்மைதான் என்று இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரான திலங்கா சுமதிபாலா கூறியுள்ளார்.

சுமதிபாலா தற்போது இலங்கை அரசியலில் உள்ளார். எம்.பியாக செயல்படுகிறார். ஏற்கனவே இதே புகாரை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரான பிந்த்ராவும் சுமத்தியிருந்தார். அதை உறுதிப்படுத்தியுள்ளார் சுமதிபாலா.

ஆனால் இந்த புகாரை ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வாரியமும், இலங்கை கிரிக்கெட் வாரியமும் மறுத்துள்ளன .

புக்கி அனுப்பிய பெண்

புக்கி அனுப்பிய பெண்

2010ம் ஆண்டு நடந்த தொடரின்போது இந்திய வீரர் ஒருவரது அறைக்கு பெண் ஒருவர் வந்ததாக பிந்த்ரா கூறியிருந்தார். அந்தப் பெண்ணை புக்கி ஒருவர்தான் அனுப்பினார் என்றும் பிந்த்ரா கூறியிருந்தார். இதைத்தான் தற்போது சுமதிபாலா உறுதிப்படுத்தியுள்ளார்.

சிசிடிவி ஆதாரம்

சிசிடிவி ஆதாரம்

இலங்கை தம்புல்லாவில் உள்ள ஹோட்டல் கந்தலாமாவில்தான் இந்த சம்பவம் நடந்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இதுதொடர்பான சிசிடிவி கேமராப் பதிவும் இருப்பதாக கூறப்படுகிறது. சம்பவ தினத்தன்று இரவு 10.45 மணிக்கு அப்பெண் இந்திய வீரரின் அறைக்கு வந்ததாகவும், காலை 6 மணிக்குத்தான் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் புயல்

நாடாளுமன்றத்தில் புயல்

இதுகுறித்து சுமதிபாலா கூறுகையில், பிந்த்ரா கூறியது உண்மைதான். அந்தப் பெண், அன்றைய இரவு முழுவதும் அந்த வீரரின் அறையில்தங்கியிருந்தார். இதை தற்போது இலங்கை நாடாளுமன்றத்திலும் நான் கிளப்பவுள்ளேன் என்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில்

யார் அந்த இந்திய வீரர் என்பது தெரிவிக்கப்படவில்லை. அது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த 6 வருடமாக அவர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூடி மறைத்த சீனிவாசன்

மூடி மறைத்த சீனிவாசன்

இந்த விவகாரம் குறித்து ஏற்னவே இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசனுக்குத் தெரிவிக்கப்பட்டதாம். ஆனால் அவர்தான் இதை அப்படியே மூடி மறைத்து விடுமாறு இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

Story first published: Friday, June 14, 2013, 10:35 [IST]
Other articles published on Jun 14, 2013
English summary
The Indian cricket board and the Sri Lanka Cricket (SLC) may have denied the media report which suggested the presence of a woman sent by a bookmaker in the hotel room of one of the members of Team India during 2010 tri-series (Sri Lanka, India and New Zealand) tour, the former SLC president, Sumathipala has backed I.S.Bindra’s claim. He said, “yes, the story was right and the woman stayed in Indian player’s room whole night”. “I am taking this issue in the Parliament here”, he further added.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X