For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீச்சல் வீராங்கனைக்கு சீனாவில் அரசியல் பதவி!

By
Gold medallist girl gets political seat in China
பெய்ஜிங்: லண்டன் ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சீனா வீராங்கனைக்கு, கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பதவி வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான நீச்சல் போட்டியில் சீன வீராங்கனை ஜியாங் லியூயாங்(21) கலந்து கொண்டார். 200 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட ஜியோ தங்கப்பதக்கம் வென்றார். மேலும் ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் ஜியாங் புதிய சாதனை படைத்தார்.

கடந்த 2008ம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியில் ஜியோ இணைந்திருந்தார். இந்த நிலையில் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஜியாங்கின் சாதனையை பாராட்டும் வகையி்ல், சீன அரசு கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலமைப்பு குழுவின் உறுப்பினர் பதவி வழங்கி கவுரவித்துள்ளது.

இப்பதவியின் மூலம் அடுத்த ஆண்டு சீனாவின் அதிபர் தேர்தல் மற்றும் கட்சியின் பொது செயலாளர் தேர்தலில் ஜியாங் கலந்து கொள்ள முடியும். சீன ராணுவ நீச்சல் அணியின் உறுப்பினராக உள்ளார் ஜியாங்,

இதன்மூலம் சீன அரசியலில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது என்ற குறையை சீன அரசு நீக்கி உள்ளது. மேலும் மிக குறைந்த வயதில் சீன அரசியல் குழுவின் உறுப்பினரான பெருமையை ஜியாங் பெற்றுள்ளார்.

Story first published: Wednesday, August 15, 2012, 16:52 [IST]
Other articles published on Aug 15, 2012
English summary
Chinese women swimming gold medallist Jiag Liuyang was selected as a member of the Communist Party's 18th Congress.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X