For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 5வது பதக்கம்-மல்யுத்தத்தில் அசத்தினார் தத்!

Yogeshwar Dutt
லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 5வது பதக்கம் கிடைத்துள்ளது. மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் யோகேஷ்வர் தத் அபாரமாக செயல்பட்டு வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

டெல்லி காவல்துறையில் அதிகாரியாக இருப்பவர் தத். ஒலிம்பிக் போட்டிக்குக் கிளம்புவதற்கு முன்பே எபப்டியும் ஒரு பதக்கம் வெல்வேன் என்று சூளுரைத்திருந்தார். இப்போது தனது உறுதிமொழியை நிறைவேற்றி விட்டார். கடந்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் வெல்லத் தவறிய பதக்கத்தை லண்டனில் பெற்று விட்டார் தத்.

ஆடவர் 60 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் அபாரமாக மோதிய தத், வெண்கலப் பதக்கம் வென்றார்.

அட்டகாசமான ஆட்டத்திறனை நேற்று வெளிப்படுத்தினார் தத். அதுவும் ஒன்றரை மணி நேரத்தில் ஐந்து பேருடன் மோதினார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் வட கொரியாவின் ஜோங் மியாங் ரியை பந்தாடி வெண்கலத்தை வென்றார்.

இந்தப் பதக்கம் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள 5வது பதக்கமாகும். ஒலிம்பிக் வரலாற்றில் அதிக அளவிலான பதக்கங்களை இந்தியா வென்றிருப்பது இதுவே முதல் முறையாகும் என்பதால் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Story first published: Sunday, August 12, 2012, 14:20 [IST]
Other articles published on Aug 12, 2012
English summary
Just before he left for the London Olympics, Yogeshwar Dutt had vowed to win a medal for the country - something he had failed to do in the last two Games. On Saturday, the Delhi Police officer lived up to his words and did the country proud by winning the bronze medal in the 60kg freestyle wrestling. Fighting with great skill and stamina, the valiant Dutt fought five bouts one after the other before outwitting North Korea's Jong Myong Ri with a breathtaking move in his final fight to grab the biggest prize of his long career.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X