For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் போட்டி: விம்பிளே கால்பந்து மைதானத்தின் பாதுகாப்பு சாவிகளை தவறவிட்ட இங்கிலாந்து போலீசார்

By
London Olympics 2012
லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியின் கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ள விம்பிளே மைதானத்தின் பாதுகாப்பு சாவிகளை தவறவிட்ட இங்கிலாந்து போலீசார், செய்வதறியாமல் திகைப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் படுஉற்சாகமாக நடைபெற்று வருகிறது. 204 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர்கள், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். ஒலிம்பிக் போட்டி துவங்குவதற்கு முன்பே, லண்டனில் தீவிரவாத தாக்குதல் நடைபெறலாம் என்று உளவுத்துறையினர் எச்சரித்தனர்.

அதனால் லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் லண்டனில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு சவால்விடும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கால்பந்து போட்டிகள் நடந்து வரும் மைதானங்களில் விம்பிளே மைதானமும் ஒன்று. இங்கு ஆண்கள் மற்றம் பெண்கள் கால்பந்து அணிகள் போட்டிகளில் மோதி வருகின்றன. இந்த நிலையில் விம்பிளே மைதானத்தின் பாதுகாப்பு சாவிகள் போலீசாரிடம் இருந்து தவறி உள்ளது.

இந்த நிலையில் பாதுகாப்பு சாவிகள் தொலைந்தாலும், மைதானத்தின் பாதுகாப்பிற்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று இங்கிலாந்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது,

மைதானத்தின் பாதுகாப்பு சாவிகள் தொலைந்து போனதால், மைதானத்தின் பாதுகாப்பிற்கு எந்த குறைப்பாடும் ஏற்படாது. தொலைந்து போன சாவிகளை தேடி வருகிறோம். மேலும் சாவிகள் பயன்படுத்தும் இடங்களில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளோம் என்றனர்.

Story first published: Monday, July 30, 2012, 16:59 [IST]
Other articles published on Jul 30, 2012
English summary
Things are going out of control at London Olympics 2012, as policemen lose their security keys at the Olympic venue, according to officials.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X