For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சரிதா தேவி மீதான தடையை திரும்ப பெற வேண்டும்... ஏஐபிஏக்கு விளையாட்டு அமைச்சகம் கடிதம்

டெல்லி: குத்துச் சண்டை வீராங்களை சரிதா தேவி மீதான தடையை திரும்பப் பெற வலியுறுத்தி சர்வதேச குத்துச்சண்டை சங்கத்திற்கு இந்திய விளையாட்டு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய குத்துச் சண்டை வீராங்கனை சரிதா தேவி, தனக்கு வழங்கப்பட்ட வெண்கலப் பதக்கத்தை வாங்க மறுத்து சர்ச்சையில் சிக்கினார்.

Sports ministry urges AIBA to revoke suspension imposed on Sarita Devi

இதனால், சர்வதேச குத்துச்சண்டை சங்கம் சரிதாதேவி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. சர்வதேச போட்டிகளில் இருந்து அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. விரைவில், சரிதாதேவிக்கு வாழ்நாள் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், சரிதா தேவி மீதான தடையை நீக்கும்படி சர்வதேச குத்துச்சண்டை சங்கத்திற்கு இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பானந்த் சோனாவல் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் அவர், 'எளிமையான குடும்பத்தில் பிறந்த சரிதா தேவி, தனது கடின உழைப்பு, விடா முயற்சி மற்றும் திறமையால் விளையாட்டில் உயர்ந்திருக்கிறார். அவரை சஸ்பெண்ட் செய்திருப்பது பிற வீரர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, சரிதா தேவி மீதான தடையை நீக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Story first published: Thursday, December 4, 2014, 8:32 [IST]
Other articles published on Dec 4, 2014
English summary
Pleading with the International Boxing Association to revoke the suspension imposed on boxer L Sarita Devi, Sports Minister Sarbananda Sonowal has written a letter to AIBA President Dr Ching Kuo Wu, requesting him to take a sympathetic view given her humble background.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X