For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டது உண்மைதான்.. ஆசிப் ஒப்புதல்

கராச்சி: இங்கிலாந்தில் நடந்த கிரிக்கெட் போட்டியின்போது ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டது உண்மைதான் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகம்மது ஆசிப் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக லாகூரில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின், தலைமை ஆபரேட்டிங் அதிகாரி சுபான் அகமதுவை சந்தித்தபோது அவர் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

ஏற்கனவே இந்த சர்ச்சையில் சிக்கிய இதர பாகிஸ்தான் வீரர்களான சல்மான் பட், முகம்மது ஆமிர் ஆகியோரும் தாங்கள் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.

4வது டெஸ்ட் போட்டி

4வது டெஸ்ட் போட்டி

லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 2010ம் ஆண்டு இங்கிலாந்துக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின்போது இந்த மூன்று வீரர்களும் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

5 ஆண்டுகள் தடை

5 ஆண்டுகள் தடை

இவர்களுக்கு 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்து கடந்த 2011ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.

நாட்டு மக்களிடம் மன்னிப்பு

நாட்டு மக்களிடம் மன்னிப்பு

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட மூன்று வீரர்களும் தங்களது தவறுகளுக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக அறிவித்தனர்.

மறுவாழ்வுக்கு தயார்

மறுவாழ்வுக்கு தயார்

இந்த நிலையில்தான் தற்போது தான் செய்த தவறை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் ஒத்துக் கொண்டுள்ளார் ஆசிப். மேலும் ஐசிசி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மூலம் மறு வாழ்வுப் புத்தாக்க ஆலோசனைப் பயிற்சிக்குத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விரைவில் இவர் உள்பட 3 பேருக்குமே ஆலோசனை முகாமை கிரிக்கெட் வாரியம் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் விளையாட ஆர்வம்

மீண்டும் விளையாட ஆர்வம்

மேலும், தான் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஆர்வமாக இருப்பதாகவும் ஆசிப் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, July 26, 2013, 12:39 [IST]
Other articles published on Jul 26, 2013
English summary
Following the footsteps of his fellow banned teammates, disgraced Pakistan pace bowler Mohammad Asif has also admitted to spot-fixing during a meeting with Subhan Ahmad, the Chief Operating Officer of the Pakistan Cricket Board in Lahore.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X