For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லண்டன் ஒலிம்பிக்: ஊக்க மருந்து பயன்படுத்திய வீராங்கனையிடம் தங்கப்பதக்கம் பறிப்பு

By
Nadzeya Ostapchuk
லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பெலாரசின் வீராங்கனையிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 'மெட்டநோலோன்' என்ற ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. இதனால் அவரது தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டது.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான குண்டெறிதல் போட்டி நடைபெற்றது. இதில் பெலாரஸ் நாட்டு வீராங்கனை நட்ஜியா ஆஸ்டப்சக் என்பவர், 21.36 மீட்டர் தூரம் குண்டெறிந்து தங்கப்பதக்கம் வென்றார். 20.70 மீட்டர் தூரத்திற்கு குண்டெறிந்த நியூசிலாந்தின் ஆடம்ஸ் வெள்ளிப்பதக்கமும், ரஷ்யாவின் கொலோட்கோ வெண்கலப்பதக்கமும் வென்றார்.

இந்த நிலையில் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனைகளுக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் குண்டெறிதலில் தங்கப்பதக்கம் வென்ற நட்ஜியா, 'மெட்டநோலோன்' என்ற தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரிய வந்தது.

இதனையடுத்து ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா முடிந்த சில மணிநேரங்களில், அவரது தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக வெள்ளிப்பதக்கம் வென்ற நியூசிலாந்து வீராங்கனைக்கு தங்கமும், வெண்கலப்பதக்கம் வென்ற ரஷ்ய வீராங்கனைக்கு வெள்ளிப்பதக்கமும் வழங்கப்பட்டது. மேலும் 4வது இடம் பிடித்த சீன வீராங்கனைக்கு வெண்கலப்பதக்கம் வழங்கப்பட்டது.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பதக்க வென்ற ஒருவர் மருத்துவ பரிசோதையில், ஊக்க மருந்து பயன்படுத்தியதாக பிடிபட்டது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, August 14, 2012, 10:54 [IST]
Other articles published on Aug 14, 2012
English summary
A Belorussian shot putter has become the first medallist of the London Olympics to be stripped of her prize just hours after the closing ceremony.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X