For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புஜாரா, விஜய் ஜோடியின் சரித்திரம் பேசும் சாதனைகள்

By Mathi

ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களான புஜாராவும் தமிழகத்தின் முரளி விஜய்யும் சரித்திரம் பேசக் கூடிய சாதனைகளை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நிகழ்த்தியிருக்கின்றனர்.

தமிழக வீரரான முரளி விஜய் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டும் விளையாடாமலேயே இருந்து வந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காம்பீர் நீக்கப்பட்டு தொடக்க வீரராக சேவாக்குடன் களம் இறக்கப்பட்டார் முரளி விஜய். சென்னை டெஸ்ட் போட்டியில் சோபிக்கவில்லை முரளி. சொற்ப ரன்களில் அவுட் ஆகிப் போனார்.புஜாராவைப் பொறுத்தவரையில் நம்பிக்கைக்குரிய இளம் வீரர். இவர் இந்திய கிரிக்கெட் அணியில் முரளி விஜய்யுடன் சேர்ந்தும் தனித்தும் ஹைதராபாத்தில் ரெக்கார்டுகளை நிகழ்த்தியிருக்கிறார்.

300 ரன்கள் ஜோடி

300 ரன்கள் ஜோடி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடந்த 2001-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ராகுல் டிராவிட்டும் விவிஎஸ் லஷ்மணும் இணைந்து 376 ரன்ளைக் குவித்திருந்தனர்.அதன் பின்னர் தற்போது ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் புஜாரா, முரளி விஜய் ஜோடி 370 ரன்களைக் குவித்திருக்கிறது.

முந்தைய சாதனை

முந்தைய சாதனை

இதற்கு முன்னதாக 1956-ம் ஆண்டு சென்னையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வினோ மன்கட்டும் பங்கஜ் ராயும் இணைந்து 413 ரன்களைக் குவித்ததுதான் இதுவரையிலான இந்திய அணியின் சாதனையாக இருக்கிறது. இதன் பின்னர் 2006-ம் ஆண்டு லக்னோவில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ராகுல் டிராவிட்டும் சேவாக்கும் இணைந்து 410 ரன்களைக் குவித்திருந்தனர்.

1000 ரன்கள் சாதனை

1000 ரன்கள் சாதனை

இந்திய அணியில் மிகக் குறைவான டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதிரடியாக ஆயிரம் ரன்களை எட்டிய வீரர்களில் மூன்றாம் இடத்தை இன்றைய

போட்டியின் மூலம் பெற்றிருக்கிறார் புஜாரா.

கவாஸ்கர், காம்ப்ளி

கவாஸ்கர், காம்ப்ளி

சுனில் கவாஸ்கர் 21 இன்னிங்ஸ் விளையாடி 1,000 ரன்களையும் வினோத் காம்ப்ளி 14 இன்னிங்ஸ் விளையாடி 1,000 ரன்களையும் எட்டினர். இவர்களுக்கு அடுத்தபடியாக புஜாரா 18 இன்னிங்ஸ்கள் விளையாடி 1,000 ரன்களை எட்டி சாதித்திருக்கிறார்.

Story first published: Wednesday, March 6, 2013, 6:24 [IST]
Other articles published on Mar 6, 2013
English summary
When India are playing Australia, broken records are never too far away. On a balmy afternoon at the Rajiv Gandhi International Stadium in Hyderabad, Cheteshwar Pujara and Murali Vijay drove down nostalgic lanes to bring back memories of that epic 376-run partnership between VVS Laxman and Rahul Dravid at the Eden Gardens in 2001.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X