For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மழை ஒருபக்கம்.. 'டிலே' ஒரு பக்கம்- 8 மணி நேரம் விரடடி விரட்டி ஆடி வென்ற சோம்தேவ்!

நியூயார்க்: ஒரு பக்கம் மழை. அதனால் ஏற்பட்ட குறுக்கீடுகள்.. இப்படி பல சோதனைகளைச் சந்தித்தபோதும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்லோவேகியாவின் லூகாஸ் லேக்கோவை கடுமையாக போராடி வீழ்த்தி வெற்றி பெற்றார் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன்.

கிட்டத்தட்ட 8 மணி நேரம் இந்தப் போட்டி இழுத்துக் கொண்டு போய் விட்டது.

இப்போட்டியில் சோம் தேவ், 4-6, 6-1, 6-2, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார்.

5 செட்

5 செட்

இந்தப் போட்டியை வெல்ல 5 செட்கள் தேவைப்பட்டது சோம்தேவுக்கு. இருந்தாலும் அவர் சளைக்கவில்லை.

கடுமையான போராட்டம்

கடுமையான போராட்டம்

லூக்காஸின் கடுமையான போட்டியையும் மீறி, அதை திறம்பட சமாளித்து, தைரியமாக விளையாடிய சோம்தேவ் அத்தனை இந்திய ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.

போட்டி என்னவோ 3 மணி நேரம்தான்

போட்டி என்னவோ 3 மணி நேரம்தான்

இருவரும் விளையாடிய நேரம் என்னவோ மொத்தம் 3 மணி 11 நிமிடங்கள்தான். ஆனால் மழைதான் இடையில் வந்து நாசப்படுத்தி விட்டது.

4 மணி நேரம் ஆட்டம் பாதிப்பு

4 மணி நேரம் ஆட்டம் பாதிப்பு

சோம்தேவ் தனது 3வது செட்டை வென்ற பின்னர் வந்த மழை கிட்டத்தட்ட 4 மணி நேரம் போட்டியை நிறுத்தி வைத்து விட்டது. பின்னர் மீணடும் ஆட்டம் தொடங்கியபோது அதே உத்வேகத்துடன் ஆடினார் சோம்தேவ்.

விட முடியாதுல்ல..

விட முடியாதுல்ல..

வெற்றிக்குப் பிறகு சோம்தேவ் கூறுகையில், செம மழை. டென்ஷனாகி விட்டது. இருப்பினும் விட முடியாதே.. கடுமையான போராட்டமாக இருந்தாலும் இறுதியில் வெற்றி கிடைத்தது சந்தோஷமாக உள்ளது என்றார்.

2 தடவை சாப்பிட்டேன் பாஸ்...

2 தடவை சாப்பிட்டேன் பாஸ்...

மழை காரணமாக போட்டி பல மணி நேரம் பாதிக்கப்பட்டதால் 2 முறை சாப்பாடு சாப்பிட்டு பொழுதைப் போக்கியதாகவும் சிரித்தபடி கூறினார் சோம்தேவ்.

குளி.. சாப்பிடு.. ரிலாக்ஸ்

குளி.. சாப்பிடு.. ரிலாக்ஸ்

மேலும் அவர் கூறுகையில், கிடைத்த கேப்பில் நன்றாக குளித்தேன், சாப்பிட்டேன், ரிலாக்ஸ் ஆக இருந்தேன்.

எப்படியோ ஜெயிச்சாச்சுல்ல.. விடுங்க பாஸ்!

Story first published: Thursday, August 29, 2013, 16:10 [IST]
Other articles published on Aug 29, 2013
English summary
Indian qualifier Somdev Devvarman needed five sets over eight hours between rain delays and a determined foe, but he reached the second round of the US Open on Wednesday with a clutch late performance. The 28-year-old former US college star defeated Slovakia's Lukas Lacko 4-6, 6-1, 6-2, 4-6, 6-4 in three hours and 11 minutes of match time, although rain halted the match for more than four hours after he won the third set.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X