For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

5000 மீ வேக நடை.. ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்ஐக்கு தங்கப் பதக்கம்!

By Staff

Recommended Video

5000 மீ வேக நடை.. ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்ஐக்கு தங்கப் பதக்கம்!

ஸ்ரீவில்லிபுத்தூர்: சீனாவில் நடைபெற்ற 5000 மீட்டர் வேக நடை போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு ஆய்வாளர் தங்கபதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஈஞ்சார் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தற்போது சிறப்பு சார்பு ஆய்வாளராக மொட்டை மலையில் சிறப்பு அதிரடிப்படை முகாமில் பணிபுரிந்து வருகிறார்.

srivilliputhur si wins gold medal in race walk tournament

இவர் காவல் துறையிலிருந்து மாநில மற்றும் தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் கடந்த 27 ஆண்டுகளாக பணியில் இருந்துகொண்டே பங்கேற்று வருகிறார்.

சுமார் 100க்கும் மேற்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்று பல்வேறு சாதனைகளை புரிந்து பல காவல் துறை உயர் அதிகாரிகளின் பொதுமக்கள் பாராட்டுக்களை பெற்றுள்ளார்

இந்நிலையில் சீனாவில் நடைபெற்ற உலக காவல்துறை தடகளப் போட்டியில் இந்தியாவின் சார்பில் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று 5000 மீட்டர் வேக நடைப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவரை அனைத்து காவலர்கள் மற்றும் முதல்வர் பாராட்டியுள்ளார்.

மேலும் இவர் இந்த ஆண்டிற்கான காவல் துறையில் வழங்கப்படும் உயரிய விருதான அண்ணா பக்கத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, September 21, 2019, 17:34 [IST]
Other articles published on Sep 21, 2019
English summary
Srivilliputhur SI Krishnamurthy has won gold medal in international Race walk tournament in China.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X