For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அச்சச்சோ.. பயந்த மாதிரியே நடந்துருச்சே.. பெரும் கவலையில் வினேஷ் பொகத்

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தள்ளிப் போனது குறித்து இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் பொகத் கவலை தெரிவித்துள்ளார். போட்டி தள்ளிப் போனது, போட்டியிடுவதை விட கடினமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

கொரோனாவைரஸ் பரவல் காரணமாக ஜப்பானின் டோக்கியோவில் இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டுக்குத் தள்ளி வைக்கப்பட்டு விட்டது. இதற்கு பல வீரர்கள், வீராங்கனைகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வினேஷ் பொகத் மட்டும் கவலை தெரிவித்துள்ளார். போட்டியில் போட்டியிட்டு எதிராளியுடன் மோதுவதை விட அடுத்த ஒரு வருடம் காத்திருப்பது கடினமானது என்று வினேஷ் தெரிவித்துள்ளார்.

அது எப்படி சிஎஸ்கே ஜெயிச்சுகிட்டே இருக்கு.. வெளியான ரகசியம்.. புட்டு புட்டு வைத்த ராகுல் டிராவிட்!அது எப்படி சிஎஸ்கே ஜெயிச்சுகிட்டே இருக்கு.. வெளியான ரகசியம்.. புட்டு புட்டு வைத்த ராகுல் டிராவிட்!

வினேஷ் பொகத்துக்கு வந்த கவலை

வினேஷ் பொகத்துக்கு வந்த கவலை

இதுகுறித்து வினேஷ் தனது டிவிட்டரில் போட்டுள்ள பதிவில், இந்த அறிவிப்பு எனக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. இது எனக்கு மட்டுமல்ல ஒவ்வொரு தடகள வீரர், வீராங்கனைக்கும் வரும் பயம்தான். நினைத்தது மாதிரியே, பயந்தது மாதிரியே நடந்து விட்டது. இதுபோன்ற போட்டிகளில் ஒரு வருட காலம் காத்திருப்பது என்பது மிக நீண்டது. அதை யாருமே விரும்ப மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

மனசுல அலை அடிக்குது

மனசுல அலை அடிக்குது

இப்போதைக்கு என்ன கருத்து சொன்னால் சரியாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனது மனசுக்குள் அப்படி ஒரு அலை அடிக்கிறது. நிறைய எண்ணங்கள் ஓடுகின்றன. இது உலகுக்கே போதாத நேரம். மிகப் பெரிய அளவில் உலகம் முழுமையும் பாதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறை அதிக அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது என்றார் வினேஷ்.

இப்போது போட்டியை நடத்துவது சரியில்லை

இப்போது போட்டியை நடத்துவது சரியில்லை

ஒலிம்பிக் போட்டிகளை தற்போதைய சூழலில் நடத்துவது சரியாக இருக்காது என்று ஜப்பான் அரசு கூறி விட்டதால் வேறு வழியில்லாமல் போட்டியை அடுத்த வருடத்திற்கு சர்வதசே ஒலிம்பிக் சங்கம் தள்ளி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதை பலர் வரவேற்றுள்ளனர் என்றாலும் வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் சற்று ஏமாற்றம்தான். காரணம் கடுமையாக எடுத்து வந்த பயிற்சிகள் இப்போது வீணாகி விட்டதே என்பதுதான்.

சவாலை வலிமையுடன் சந்திப்போம்

சவாலை வலிமையுடன் சந்திப்போம்

வினேஷ் மேலும் கூறுகையில், இப்போது அனைவரும் ஒருங்கிணைந்து இந்த சவாலை வலிமையுடன் சந்திக்க வேண்டும். அசாதாரண சூழ்நிலைக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட வேண்டும். நம்மால் இந்த சவாலை சமாளித்து மேலெழுந்து வர முடியும் என்ற உணர்வுக்குள் நாம் போக வேண்டும். நமது இலக்கிலிருந்து தவறி விடாமல் உறுதியுடன் இருக்க வேண்டிய நேரம் இது என்று கூறியுள்ளார்.

Story first published: Thursday, March 26, 2020, 18:02 [IST]
Other articles published on Mar 26, 2020
English summary
Indian Wrester says Postponement of Tokyo Olympics was her Worst Fear
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X