For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அண்டர்டேக்கரை அனுப்புவது போல அனுப்பி விட்டு.. அந்த லெஜன்ட்டை இறக்கும் WWE.. கசிந்த தகவல்!

நியூயார்க் : WWE ரெஸ்லிங் போட்டிகளில் 30 ஆண்டுகளாக பங்கேற்று வந்த அண்டர்டேக்கர் சமீபத்தில் ஓய்வு பெற்றார்.

அவர் ஓய்வை அறிவித்த நிலையில், சம காலத்தில் அவருக்கு இணையான வீரராக போட்டி நிறுவனமான WCWவில் வலம் வந்த ஸ்டிங் மீண்டும் தான் போட்டிக்கு தயாராக இருப்பதாக சூசகமான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அது WWE ரசிகர்கள் இடையே பரபரப்பை கிளப்பி உள்ளது. ஸ்டிங் வயதான நிலையில் அதிக போட்டிகளில் ஆட முடியாது.

ஆதாரம் இல்லை.. முடிவுக்கு வந்த 2011 உலகக்கோப்பை பைனல் மேட்ச் பிக்ஸிங் சர்ச்சை.. செம ட்விஸ்ட்!ஆதாரம் இல்லை.. முடிவுக்கு வந்த 2011 உலகக்கோப்பை பைனல் மேட்ச் பிக்ஸிங் சர்ச்சை.. செம ட்விஸ்ட்!

லட்சிய போட்டி

லட்சிய போட்டி

ஸ்டிங் தன் கடைசி போட்டியில் ஆட உள்ளதாகவே சூசகமாக கூறி உள்ளார். முன்பு ஒரு முறை அண்டர்டேக்கருடன் தான் ஒரு போட்டியில் ஆட வேண்டும் என்றும், அதுதான் தன் லட்சிய போட்டி என்றும் ஸ்டிங் கூறி இருந்தார்.

கடைசி போட்டி

கடைசி போட்டி

தற்போது அண்டர்டேக்கர் WWE-இல் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ரெஸ்ஸில்மேனியா 36 தொடரின் தன் கடைசிப் போட்டியில் அவர் ஆடி இருந்தார். ஏஜே ஸ்டைல்ஸ்-க்கு எதிரான அந்தப் போட்டியில் அவர் ஆடிய நிலையில், அடுத்ததாக தன் அனுபவங்களை பகிர்ந்து வந்தார்.

மீண்டும் அண்டர்டேக்கர்

மீண்டும் அண்டர்டேக்கர்

தி லாஸ்ட் ரைடு என பெயரிடப்பட்ட நிகழ்ச்சியில் அண்டர்டேக்கர் மனம் விட்டு பல்வேறு நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் முடிவில் தான் தன் ஓய்வை அறிவித்தார் அண்டர்டேக்கர். எனினும், அண்டர்டேக்கர் மீண்டும் WWE போட்டிகளில் பங்கேற்பாரா? என்ற கேள்வி இருந்தது.

மீண்டும் அழைத்தால்..

மீண்டும் அழைத்தால்..

காரணம், அந்த நிகழ்ச்சியில் WWE நிறுவனர் வின்ஸ் மிக்மேன் தன்னை மீண்டும் அழைத்தால், அப்போது தன் உடல்நிலை ஒத்துழைத்தால் தான் மீண்டும் போட்டிகளில் பங்கேற்பேன் என கூறி இருந்தார். அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டு சில நாட்களே ஆகி உள்ளது.

லாஸ்ட் ரைடு

லாஸ்ட் ரைடு

இந்த நிலையில், ஸ்டிங் அவரை போட்டிக்கு அழைக்கும் வகையில் ட்வீட் போட்டுள்ளார். ஸ்டிங்குடன் யார் "லாஸ்ட் ரைடு" வர விரும்புகிறீர்கள் என கேள்வி எழுப்பி இருந்தார். அவர் அண்டர்டேக்கரை தான் போட்டிக்கு அழைத்துள்ளார் என பலரும் கூறி வருகின்றனர்.

மறைமுக அழைப்பு

மறைமுக அழைப்பு

அண்டர்டேக்கர் "தி லாஸ்ட் ரைடு" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், அதே வார்த்தையை வைத்து அண்டர்டேக்கரை மறைமுகமாக போட்டிக்கு அழைத்துள்ளார். ஸ்டிங் - அண்டர்டேக்கர் மோதல் ஒரு கனவுப் போட்டிய ஆகும். இந்தப் போட்டி நடக்குமா? என ரசிகர்கள் இப்போதே பேசத் துவங்கி விட்டனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

2014இல் தான் ஸ்டிங் WWEஇல் இணைந்தார். அப்போது முதலே அண்டர்டேக்கர் - ஸ்டிங் போட்டி நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால், ஸ்டிங், ட்ரிப்பிள் எச் மற்றும் செத் ரோலின்ஸ் உடன் மட்டுமே மோதினார். இதில் ரோலின்ஸ் போட்டியில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரெஸ்லிங்கை விட்டு விலகினார்.

அண்டர்டேக்கரை வைத்து திட்டம்

அண்டர்டேக்கரை வைத்து திட்டம்

இந்த நிலையில், அவர் தான் மீண்டும் போட்டிகளில் பங்கேற்க இருப்பதையும் குறிப்பிட்டுள்ளார். WWE ஒப்புதல் இல்லாமல் அவர் அந்த ட்வீட்டை போட்டிருக்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. அண்டர்டேக்கரை வைத்து WWE இன்னும் நிறைய திட்டம் வைத்துள்ளதோ என்றே தோன்றுகிறது.

ஒரே நேரத்தில் ஓய்வு

ஒரே நேரத்தில் ஓய்வு

ஸ்டிங் - அண்டர்டேக்கர் இருவருமே இனி அதிக போட்டிகளில் ஆட முடியாது. அவர்களது கனவுப் போட்டியை நடத்தி ஒரே நேரத்தில் இருவரையும் ஓய்வு பெற வைக்கவும் WWE திட்டமிட்டு இருக்கலாம். அல்லது ஸ்டிங்கிற்கான கடைசி போட்டியையும், அண்டர்டேக்கரைப் போல பிரம்மாண்டமாக நடத்தும் திட்டமாகவும் இது இருக்கலாம்.

Story first published: Friday, July 3, 2020, 20:13 [IST]
Other articles published on Jul 3, 2020
English summary
Sting hints at in-ring return to WWE as well as call for Undertaker for the dream match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X