காமன்வெல்த்-ல் அனல்பறந்த குத்தாட்டம்.. அரங்கையே ஆட வைத்த தமிழர்கள்.. சர்வதேச அளவில் பெருமை - வீடியோ!

பிர்மிங்கம்: காமன்வெல்த் போட்டியில் தமிழ் பெண்கள் குத்துப்பாட்டிற்கு நடனம் ஆடிய வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

நடப்பாண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பிர்மிங்கம் நகரத்தில் நடைபெற்றது.

கடந்த ஜுலை 29ம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள் ஆகஸ்ட் 9ம் தேதியன்று முடிவுக்கு வந்தது.

16 ஆண்டுகளில் இல்லாத மோசம்.. காமன்வெல்த்-ல் இந்தியாவுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்.. அதிருப்தியில் ரசிகர்கள்16 ஆண்டுகளில் இல்லாத மோசம்.. காமன்வெல்த்-ல் இந்தியாவுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்.. அதிருப்தியில் ரசிகர்கள்

 காமன்வெல்த்

காமன்வெல்த்

இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் அடுத்தடுத்து பதக்கங்களை குவித்து பெருமை சேர்த்தனர். 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தமாக 61 பதக்கங்களை குவித்து இந்தியர்கள் அசத்தினர். இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் இந்தியா 4வது இடத்தை பிடித்தது. நாடு முழுவதும் இருந்து அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

குத்தாட்டம் போட்ட தமிழர்கள்

குத்தாட்டம் போட்ட தமிழர்கள்

இந்நிலையில் காமன்வெல்த்-ல் நடந்த மற்றொரு சம்பவம் இணையத்தை கலக்கி வருகிறது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட நடன கலைஞர்களான உஷா ஜே, மித்துஜா, ஜானுஷா ஆகியோர் சர்வதேச அளவில் நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இவர்கள் காமன்வெல்த் அரங்கில் தமிழ் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு அரங்கையே அதிர வைத்தனர்.

Recommended Video

CWG P.V.Sindhu | முதல் Gold Medal வென்றார் பி.வி.சிந்து *Sports | Oneindia Tamil
என்ன பாடலுக்கு நடனம்?

என்ன பாடலுக்கு நடனம்?

'அவன் இவன்' திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான "டியா டியா டோலே" என்ற பாடலுக்கு கண்களை கவரும் வகையில் நடனம் ஆடினர். இதனை பார்த்த அயல்நாட்டவர்களும் நடனமாடி மகிழ்ந்துள்ளனர். சர்வதேச அரங்கில் தமிழ் இசை மற்றும் பெருமைகளை கொண்டு சேர்த்த 3 பெண்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

உஷாவின் பதிவு

இதுகுறித்து ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள உஷா ஜே, குத்தாட்டம் என்பது எங்களின் கவலைகளை மறந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரு வழி. எங்களின் தொண்மையான நடனக் கலை. எங்களின் கலாச்சாரத்தை இவ்வளவு பெரிய அரங்கில் பறைசாற்றியது மிக மகிழ்ச்சியாக உள்ளது. காமன்வெல்த்-ல் தமிழ் பாடலுக்கு நடனமாடினேன் என்பது இன்னும் எனக்கு ஆச்சரியமாகவே உள்ளது என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Tamil Girls kuthu dance in Commonwealth games 2022 ( காமன்வெல்த் போட்டிகளில் தமிழ் குத்தாட்டம் ) காமன்வெல்த் போட்டியில் தமிழ் பெண்கள் போட்ட குத்தாட்டம் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.
Story first published: Thursday, August 11, 2022, 10:07 [IST]
Other articles published on Aug 11, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X