For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Lockdown 4.0 : விளையாட்டுப் போட்டிகளுக்கு பயிற்சி பெற அனுமதி.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : கொரோனா வைரஸ் காரணமாக தமிழ்நாட்டில் தற்போது அமலில் இருக்கும் லாக்டவுன் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

25 மாவட்டங்களுக்கு மட்டும் லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற கட்டுப்பாடுடன் அனுமதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Tamilnadu Government allowed sports practice in Lockdown 4.0

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதமாக லாக்டவுன் அமலில் உள்ளது. மூன்று கட்டமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. மூன்றாவது கட்ட லாக்டவுன் முடிவடைந்த நிலையில், நான்காவது கட்ட லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு மட்டும் முந்தைய லாக்டவுன் விதிகளே தொடரும் என அறிவித்துள்ளது. மீதமுள்ள 25 மாவட்டங்களுக்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

சச்சின் விஷயத்தில் பொய் சொன்ன கிரிக்கெட் வீரர்.. ஆதாரத்துடன் கிழித்து தொங்கவிட்ட ரசிகர்கள்!சச்சின் விஷயத்தில் பொய் சொன்ன கிரிக்கெட் வீரர்.. ஆதாரத்துடன் கிழித்து தொங்கவிட்ட ரசிகர்கள்!

அதில் போக்குவரத்து, தொழில்கள் தொடர்பான பல தளர்வுகள் அறிவிக்க்கப்படுள்ளன. அத்துடன் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு தனி பயிற்சியாளர் மூலம் பயிற்சி பெற அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், சென்னை மாநகர ஆணையரிடமும் அனுமதி பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

லாக்டவுன் விதிகளால் பல விளையாட்டு வீரர்கள் பயிற்சி செய்ய முடியாமல் தவித்து வந்தனர். அதனால், அவர்கள் அடுத்து போட்டிகள் நடைபெற்றால் அதில் எப்படி சிறப்பாக செயல்பட முடியும் என்ற கவலையில் இருந்தனர்.

தனி நபர் மூலம் பயிற்சி பெறவாவது அனுமதிக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரி வந்த நிலையில் அதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

BCCI launched an app for Indian cricketers to practice

எனினும், கிரிக்கெட் அணிகளுக்கு பயிற்சிக்கு அனுமதி கிடைக்குமா? என்ற கேள்வி உள்ளது. காரணம், கிரிக்கெட் அணிகளில் இரண்டுக்கும் மேற்பட்ட வீரர்கள் இணைந்து தான் முழுமையாக பயிற்சி செய்ய முடியும். அதே சமயம், தனிப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி செய்ய அனுமதி பெறுவதில் சிக்கல் இருக்காது.

Story first published: Sunday, May 17, 2020, 16:52 [IST]
Other articles published on May 17, 2020
English summary
Tamilnadu Government allowed sports practice in Lockdown 4.0
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X