For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

போர்ப்சின் பணக்கார விளையாட்டு வீராங்கனைகள் பட்டியல் வெளியீடு.. ஒசாகா, செரீனா முன்னிலை

லண்டன் : இந்த ஆண்டிற்கான போர்ப்ஸ் பத்திரிகையின் பணக்கார விளையாட்டு வீராங்கனைகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Recommended Video

IPL 2020: BCCI rejects Dream 11's next 2 years bid

கடந்த ஆண்டு ஜூன் 1ம் தேதியிலிருந்து இந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி வரையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் முதல் 10 இடங்களில் 9 இடங்களில் டென்னிஸ் வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். முதலிடத்தில் ஜப்பானை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா உள்ளார்.

 சீக்கிரமா ஆரம்பிச்சு சீக்கிரமா முடிங்க... இங்கிலாந்து பயிற்சியாளரின் புதிய ஆலோசனை சீக்கிரமா ஆரம்பிச்சு சீக்கிரமா முடிங்க... இங்கிலாந்து பயிற்சியாளரின் புதிய ஆலோசனை

போர்ப்ஸ் பத்திரிகை வெளியீடு

போர்ப்ஸ் பத்திரிகை வெளியீடு

ஆண்டுதோறும் போர்ப்ஸ் பத்திரிகை உலகின் பணக்காரர்களின் பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. இதேபோல தற்போது பணக்கார விளையாட்டு வீராங்கனைகளின் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் இந்த ஆண்டு ஜூன் 1ம் தேதிவரையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டாவது இடத்தில் செரீனா

இரண்டாவது இடத்தில் செரீனா

இதில் ஜப்பானிய டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்சை இரண்டாவது இடத்திற்கு தள்ளி முன்னேறியுள்ளார். இவர்களின் பரிசுத்தொகைகள், போனஸ் மற்றும் விளம்பர ஒப்பந்தங்களை கணக்கில் கொண்டு இந்த பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. உலகின் 100 விளையாட்டு பிரபலங்களின் வரிசையில் ஒசாகா மற்றும் செரீனா இருவரும் 29 மற்றும் 33வது இடங்களில் உள்ளனர்.

விளம்பரங்கள் மூலம் அதிக வருமானம்

விளம்பரங்கள் மூலம் அதிக வருமானம்

ஒசாகாவின் ஆண்டு வருமானம் 37.4 மில்லியன் டாலராக உள்ளது. இதில் விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் மட்டுமே இவர் 34 மில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளார். இந்த அளவில் ரோஜர் பெடரர் மட்டுமே விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் அதிகமான வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரராக உள்ளார்.

ஆண்டு வருமானம் 36 மில்லியன் டாலர்

ஆண்டு வருமானம் 36 மில்லியன் டாலர்

36 மில்லியன் டாலர் வருமானத்துடன் செரீனா வில்லியம்ஸ் சிறிதளவு இடைவெளியில் முதலிடத்தை இழந்துள்ளார். ஆனால் மூன்றாவது இடத்தில் உள்ள டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லி பார்டிக்கும் செரீனாவிற்கும் இடையில் அதிகமான இடைவெளி காணப்படுகிறது. பார்டியின் வருமானம் 13.1 மில்லியன் டாலராக உள்ளது.

கால்பந்து வீராங்கனை இடம்பிடிப்பு

கால்பந்து வீராங்கனை இடம்பிடிப்பு

இந்த பட்டியலில் அடுத்தடுத்து சிமோனா ஹாலெப், பியான்கா ஆண்ட்ரெஸ்கு, கார்பைன் முகுருசா, எலினா ஸ்விடோலினா, சோபியா கெனின் மற்றும் ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோர் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளனர். இந்த 10 இடங்களில் டென்னிஸ் இல்லாமல் இடம்பெற்றுள்ள ஒரே வீராங்கனை அமெரிக்காவின் கால்பந்து வீராங்கனை அலெக்ஸ் மார்கன் மட்டுமே.

Story first published: Thursday, August 20, 2020, 10:16 [IST]
Other articles published on Aug 20, 2020
English summary
Forbes analysed the period between June 1, 2019, and June 1, 2020
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X