For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பல சாதனைகள்... பல போராட்டங்கள்... பத்தாண்டுகளில் விளையாட்டில் உச்சம் தொட்ட வீரர்கள்!

சர்வதேச அளவில் கடந்த 10 ஆண்டுகளில் பலதரப்பட்ட விளையாட்டுகளில் பல்வேறு சாதனைகளை வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் விளையாட்டுத்துறையில் பல முன்னேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, அடித்தள மக்களுக்கும் வாய்ப்புகள் கிடைத்து அவர்கள் தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர்.

இந்தியாவிலும் பல இளம் திறமைகள் வெளிக்கொணரப்பட்டு பல சாதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிரிக்கெட் மட்டுமின்றி மற்ற விளையாட்டுகளிலும் வீரர்கள் தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர்.

விளையாட்டில் உச்சம் தொட்ட வீரர்கள்

விளையாட்டில் உச்சம் தொட்ட வீரர்கள்

கடந்த பத்தாண்டுகளில் விளையாட்டில் பல்வேறு வீரர்கள் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்களாக தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர்.

நாட்டிற்காக சாதிப்பதில் மகிழ்ச்சி

நாட்டிற்காக சாதிப்பதில் மகிழ்ச்சி

நாட்டிற்காக விளையாடும் ஒரு அணியோ அல்லது தனிப்பட்ட வீரர்களோ, தங்களுடைய மேம்பட்ட திறமையை வெளிப்படுத்தி, முந்தைய சாதனைகளை முறியடிப்பதன்மூலம் நாட்டிற்கும் தங்களுக்கும் பெருமை தேடிக் கொள்கின்றனர்.

சாதனைகளை முறியடித்த வீரர்கள்

சாதனைகளை முறியடித்த வீரர்கள்

சர்வதேச அளவில் கடந்த பத்தாண்டுகளில் பல விளையாட்டுகளில் முந்தைய சாதனைகளை முறியடித்துள்ள வீரர்களின் சாதனைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

உலக புகழ்பெற்றுள்ள வீராங்கனை

உலக புகழ்பெற்றுள்ள வீராங்கனை

அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ் கடந்த அக்டோபர்

மாதத்தில் மூன்று டபுள்சை வெற்றி கொண்டு உலகையே தன்னை நோக்கி திரும்ப வைத்துள்ளார். உலக சாம்பியன்ஷிப்பில் இதுவரை 25 பதக்கங்களை பெற்றுள்ள இவர், இன்னும் இரண்டு பதக்கங்களை வென்றால், பெலாரஸின் விட்டலி ஷெர்போவின் சாதனையை முறியடிப்பார்.

2 மணிநேரங்களில் ஓட்டம்

2 மணிநேரங்களில் ஓட்டம்

வியன்னாவில் பிரத்யேகமாக நடத்தப்பட்ட 2 மணிநேர மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட கென்ய தடகள வீரர் எலியட் கிப்கோஜ் தன்னுடைய சாதனையை 1 மணிநேரம், 59 நிமிடங்கள் மற்றும் 40 விநாடிகளில் முடித்து சாதனை படைத்தார்.

தங்கம் வென்ற பிவி சிந்து

தங்கம் வென்ற பிவி சிந்து

பேட்மின்டன் போட்டியின் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனையை எதிர்த்து கடந்த ஆகட்ஸ் மாதத்தில் மோதிய இந்திய வீராங்கனை பிவி சிந்து, தங்கம் வென்றார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப்பை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.

11 ஆண்டுக்கு பிறகு சாதனை

11 ஆண்டுக்கு பிறகு சாதனை

மாஸ்டர் கோப்பை போட்டியில் இந்த ஆண்டு தனது 5வது கோப்பையை அமெரிக்க கால்ப் வீரர் டைகர் வுட்ஸ் கைப்பற்றினார். கடந்த 11 ஆண்டுகளாக பெரிய போட்டிகளில் பங்கேற்காத அவர் மீண்டும் பங்கேற்று தனது 15வது பெரிய கோப்பையை கைப்பற்றியுள்ளார்.

லியோனல் மெஸ்ஸியின் சாதனை

லியோனல் மெஸ்ஸியின் சாதனை

பிரான்ஸ் கால்பந்து கழகம் சார்பில் வழங்கப்படும் பாலன் டி ஆர் விருதை 6வது முறையாக சர்வதேச கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி பெற்றுள்ளார். கால்பந்து வீரர்களின் கனவாக கருதப்படும் இந்த விருதை 6வது முறையாக பெற்றதன்மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையை மெஸ்ஸி முறியடித்துள்ளார்.

சச்சின் சாதனையை முறியடித்த கோலி

சச்சின் சாதனையை முறியடித்த கோலி

சச்சின் டெண்டுல்கரின் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 11,000 ரன்கள் என்ற சாதனையை கடந்த ஜூன் மாதத்தில் கேப்டன் விராட் கோலி முறியடித்தார். டெண்டுல்கர் 276 இன்னிங்சில் இந்த சாதனையை நிகழ்த்திய நிலையில், இதை 222 போட்டிகளிலேயே விராட் கோலி முறியடித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அணி வெற்றி

தென்னாப்பிரிக்க அணி வெற்றி

இந்த ஆண்டு நடைபெற்ற ரக்பி 2019 உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்தை முறியடித்து தென்னாப்பிரிக்க அணி கோப்பையை வென்றது.

அந்த அணியின் வீரர் பொல்லார்டின் 6 பெனால்டிகள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றன.

தடகளத்தில் சாதித்த ஹிமா தாஸ்

தடகளத்தில் சாதித்த ஹிமா தாஸ்

கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச ஐஏஏஎப்

அன்டர் 20 வீரர்களுக்கான சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் இந்தியாவின் தடகள வீராங்கனை ஹிமா தாஸ், 400 மீட்டர் பிரிவில் 51.46 விநாடிகளில் ஓடி இந்தியாவிற்கு முதல் தங்கத்தை வாங்கித் தந்தார்.

Story first published: Wednesday, December 18, 2019, 19:11 [IST]
Other articles published on Dec 18, 2019
English summary
Top Achievements of the Decade
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X