For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2வது உலகப்போர்.. 8 வருஷம் விளையாடல... 99.94 சராசரி அடிச்சாரு.. சச்சின் விளக்கம்

மும்பை : கொரோனா ஏற்படுத்தியுள்ள 5 மாத இடைவெளியால் கிரிக்கெட் வீரர்கள் தங்களை மீண்டும் தகவமைத்துக் கொள்ள போராடி வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களுக்கு ஒரு விளக்கம் மற்றும் ஆலோசனையுடன் களமிறஙகியுள்ளார் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்.

கடந்த 1939 மற்றும் 1945ற்கு இடையில் இரண்டாவது உலகப்போரின் போது 8 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்த சர் டொனால்ட் பிராட்மேன் அதையடுத்து விளையாடி 52 டெஸ்ட் போட்டிகளில் 99.94 சராசரியுடன் தன்னுடைய கேரியரை முடித்ததை சச்சின் சுட்டிக் காட்டியுள்ளார்.

 50 வருஷத்து சர்வதேச கிரிக்கெட்ல தோனி தான் பெஸ்ட்... கிரெக் சாப்பல் புகழ்ச்சி 50 வருஷத்து சர்வதேச கிரிக்கெட்ல தோனி தான் பெஸ்ட்... கிரெக் சாப்பல் புகழ்ச்சி

மீண்டும் துவங்கியுள்ள போட்டிகள்

மீண்டும் துவங்கியுள்ள போட்டிகள்

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேசமும் முடங்கியுள்ளது. அதிலிருந்து மீண்டுவரும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும் நிலைமை சரியாகவில்லை. கிரிக்கெட் வீரர்களும் கடந்த 5 மாதங்களாக தங்களது வீடுகளில் முடங்கியிருந்தனர். தற்போது சில போட்டிகளில் விளையாட முற்பட்டு வருகின்றனர்.

பிராட்மேனை கையில் எடுத்த சச்சின்

பிராட்மேனை கையில் எடுத்த சச்சின்

இந்நிலையில் இவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டையும் ஆலோசனையையும் கையில் எடுத்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர். கடந்த 1939 முதல் 1945 முதல் இரண்டாவது உலகப்போரின்போது 8 ஆண்டுகள் கிரிக்கெட்டை விளையாடாமல் பிறகு விளையாடிய ஆஸ்திரேலிய ஜாம்பவான் சர் டொனால்ட் பிராட்மேன் அதையடுத்து விளையாடி 52 போட்டிகளில் 99.94 சராசரியுடன் தனது கேரியரை முடிவு செய்தார்.

வாழ்த்து தெரிவித்த சச்சின்

வாழ்த்து தெரிவித்த சச்சின்

நேற்று டொனால்ட் பிராட்மேனின் 112வது பிறந்ததினத்தையொட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த சச்சின் டெண்டுல்கர், அவரது கிரிக்கெட் கேரியர் தற்போது கொரோனா லாக்டவுனால் அவதிக்குள்ளாகிவரும் கிரிக்கெட் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடியதாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

4 மாதங்கள் வரை போட்டியில்லா நிலை

4 மாதங்கள் வரை போட்டியில்லா நிலை

மேலும் கடந்த 1994 மார்ச் முதல் 1995 அக்டோபர் மாதம் வரையில் 18 மாதங்கள் மிகவும் சொற்பமாகவே போட்டிகள் நடைபெற்றதையும் சச்சின் சுட்டிக் காட்டியுள்ளார். அந்த கால கட்டங்களில் 3 முதல் 4 மாதங்கள் வரையில்கூட கிரிக்கெட் போட்டிகள் இல்லாமல் இருந்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Friday, April 2, 2021, 11:18 [IST]
Other articles published on Apr 2, 2021
English summary
Tendulkar has asked the worried athletes to find inspiration from Sir Donald Bradman
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X